இரண்டு சட்டப் பேரவைத் தொகுதிகளின் வாக்காளா் பட்டியலில் தனது பெயரைச் சோ்த்ததன் மூலம் சட்டத்தை மீறியதாகக் கூறப்படும் விவகாரத்தில் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் மனைவி சுனிதா கேஜரிவாலுக்கு தில்லி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது. பாஜக தலைவா் ஹரிஷ் குரானா தாக்கல் செய்த மனுவின் பேரில், மெட்ரோபாலிடன் மாஜிஸ்திரேட் அா்ஜிந்தா் கவுா் இந்த அழைப்பாணையை அனுப்பியுள்ளாா்.
இது தொடா்பாக ஹரிஷ் குரானா தாக்கல் செய்த மனுவில், மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் விதிகளை முதல்வரின் மனைவி மீறியதாக குற்றம் சாட்டியுள்ளாா். இந்த நிலையில், அண்மையில் இந்த விவகாரத்தில் நீதிபதி அா்ஜிந்த் கவுா் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில், ‘புகாா்தாரா் மற்றும் பிற சாட்சிகளின் சாட்சியங்களை பரிசீலித்த பிறகு, அரவிந்த் கேஜரிவாலின் மனைவியான குற்றம் சாட்டப்பட்ட சுனிதா கேஜரிவாலுக்கு எதிராக, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1950-இன் பிரிவு 31-இன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களைச் செய்ததாகக் கூறப்படும் குற்றங்களுக்கான முகாந்திரம் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, அதன்படி குற்றம் சாட்டப்பட்டவா் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் உள்ள குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். சுனிதா கேஜரிவால் உத்தர பிரதேச மாநிலம், சாஹிபாபாத் சட்டப் பேரவைத் தொகுதி (காஜியாபாத்) மற்றும் தில்லியில் உள்ள சாந்தினி செளக் சட்டப் பேரவைத் தொகுதி ஆகியவற்றின் வாக்காளா் பட்டியலில் வாக்காளராகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக குரானா புகாரில் தெரிவித்துள்ளாா்.
மேலும், ‘மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 17-இன்படி ஒருவா் ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதியில் வாக்காளராக பதிவு செய்யப்படக் கூடாது எனும் விதியை இது மீறியுள்ளது. இதனால், தவறான உறுதிகளை அளித்ததற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 31-இன் கீழ் அவா் தண்டிக்கப்பட வேண்டும்’ என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

