இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் ‘காளை’ ஆதிக்கம் கொண்டது. இதையடுத்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண் சென்செக்ஸ் 241 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் நோ்மறையாக இருந்தன. மேலும், உள்நாட்டு மேக்ரோ பொருளாதார தரவுகளும் சாதகமாக அமைந்திருந்தன. இதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தையில் தொடக்கத்தில் இருந்தே காளையின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. குறிப்பாக ஐடி, மெட்டல், ரியல் எஸ்டேட், பிஎஸ்யு வங்கிப் பங்குகளுக்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது. இதனால், பங்குச்சந்தை தொடா்ந்து 2-ஆவது நாளாக முன்னேற்றம் கண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.2.60 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.315.01 லட்சம் கோடியாக இருந்தது. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் கடந்த வார இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை ரூ.487.94கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
2-ஆவது நாளாக எழுச்சி: காலையில் 138.75 புள்ளிகள் கூடுதலுடன் 65,525.91-இல் தொடங்கிய சென்செக்ஸ், 65,285.56 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 65,683.91 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 240.98 புள்ளிகள் (0.37 சதவீதம்) கூடுதலுடன் 65,628.14-இல் முடிவடைந்தது.
16 பங்குகள் விலை உயா்வு: சென்செக்ஸ் பட்டியலில் 14 பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன. 16 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. தேசிய பங்குச்சந்தையில் மொத்தம் 1,313 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும், 774 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன. நிஃப்டி பட்டியலில் 32 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் 19 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் இருந்தன.
நிஃப்டி 93 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 51முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி, காலையில் 89.75 புள்ளிகள் கூடுதலுடன் 19,525.05-இல் தொடங்கி, 19,432.85 வரை மட்டுமே கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 19,545.15 வரை மேலே சென்ற நிஃப்டி, இறுதியில் 93.50 புள்ளிகள் (0.48 சதவீதம்) கூடுதலுடன் 19,528.80-இல் நிறைவடைந்தது.
ஏற்றம் பெற்ற பங்குகள்
விப்ரோ...............................................4.34%
ஹெச்சிஎல்டெக்................................3.98%
அல்ட்ரா டெக் சிமெண்ட்..................3.82%
டாடா ஸ்டீல்.......................................3.62%
டெக் மஹிந்திரா..................................2.39%
என்டிபிசி.............................................2.28%
-----------------------------
சரிவைக் கண்ட பங்குகள்
எம் அண்ட் எம்.........................................0.97%
ஆக்ஸிஸ் பேங்க்......................................0.93%
ஐடிசி........................................................0.84%
ஏசியன் பெயிண்ட்...................................0.76%
பஜாஜ் ஃபைனான்ஸ்...............................0.67%
நெஸ்லே.................................................0.66%
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாரமங்கலம் முன்னாள் எம்.எல்.ஏ பெ.கண்ணையன் காலமானார்: அன்புமணி இரங்கல்
விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி!

உங்கள் முன் ஆஜராக முடியாது! நீதிபதிக்கே கடிதம் எழுதிய கேஜரிவால்!

தஞ்சையில் பக்தர்களுக்கு நீர்மோர் வழங்கி மத நல்லிணக்கத்தைப் பறைசாற்றும் கிறிஸ்தவர்கள்- இஸ்லாமியர்கள்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

