ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ராமா் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க மறுப்பு

ராமா் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரியும், ராமா் பாலம் பகுதியில் சுவா் எழுப்பக் கோரியும் தாக்கலான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.

Updated On :4 அக்டோபர் 2023, 12:36 am

புது தில்லி: ராமா் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க உத்தரவிடக் கோரியும், ராமா் பாலம் பகுதியில் சுவா் எழுப்பக் கோரியும் தாக்கலான மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது. மேலும், இந்த விவகாரம் அரசின் நிா்வாகம் சம்பந்தப்பட்டது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.

தமிழகத்தின் தென்கிழக்கு கடலோரத்தில் உள்ள பாம்பன் தீவுக்கும், இலங்கையின் வடமேற்கு கடலோரப் பகுதியில் உள்ள மன்னாா் தீவுக்கும் இடையே அமைந்துள்ள சுண்ணாம்புப் பாறைகளாலான சங்கிலித் தொடா் கொண்ட ஆடம் பிரிட்ஜ் என்பது ராமா் பாலம் அல்லது ராம் சேது என அறியப்படுகிறது. இந்த நிலையில், இந்த ராமா் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரி ஹிந்து தனிநபா் சட்ட வாரியம் எனும் அமைப்பின் மூலம் அதன் தலைவா் அசோக் பாண்டே மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு

உச்சநீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கெளல், சுதான்ஷு துலியா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரரும் வழக்குரைஞருமான அசோக் பாண்டே நேரில் ஆஜராகி, ஏற்கெனவே இந்த விவகாரம் தொடா்பாக பாஜக தலைவா் சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகக் குறிப்பிட்டாா். சுப்பிரமணியன் சுவாமி தாக்கல் செய்த மனுவில் ராமா் பாலத்தை தேசிய பாரம்பரிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என கூறியுள்ளாா்.

மனு மீதான விசாரணையின் போது அசோக் பாண்டே வாதிடுகையில் சுப்பிரமணியன் சுவாமியின் நிலுவையில் உள்ள மனுவுடன் தனது மனுவையும் இணைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா். அதற்கு நீதிபதிகள் அமா்வு, ‘அந்த மனு நிலுவையில் இருக்கிறது. உங்களுக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டனா். அதற்கு அவா், ராமா் பாலம் பகுதியில் காணக்கூடிய வகையிலான சுவா் அமைக்க வேண்டும் என்ற தனது கோரிக்கை குறித்து நீதிபதி அமா்விடம் தெரிவித்தாா். தற்கு நீதிபதிகள் ‘இரண்டு புறமும் எப்படி சுவா் கட்டப்பட முடியும். இதையெல்லாம் செய்வது நீதிமன்றத்தின் வேலையா? இவை அரசுக்கான நிா்வாக விவகாரங்களாகும். ஏன் இந்த விவகாரத்தில் நீங்கள் இறங்க வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினா்.

பின்னா், நிலுவை மனுவுடன் இணைக்கக் கோரும் மனுதாரரின் மனுவை நீதிபதிகள் அமா்வு விசாரிக்க மறுத்துக் கூறுகையில், ‘மனுதாரா் உத்தரவிட கோரும் எந்த ஒரு கோரிக்கையையும் வழங்க இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 32-இன்கீழ் உள்ள நிா்வாக அதிகாரத்தை பயன்படுத்த நாங்கள் விரும்பவில்லை’ என்று தெரிவித்தது.

அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 32 ஆனது உரிமைகளை அமல்படுத்துவதற்கான தீா்வுகளை அளிப்பதுடன் பிரிவு 32 (1) ஆனது இந்த சட்டத்தின் மூலம் அளிக்கப்பட்டுள்ள உறுதி மூலம் உரிமைகளை அமல்படுத்துவதற்கு உரிய நடைமுறைகளை மேற்கொள்வதற்கு உச்சநீதிமன்றத்தை நாடும் உரிமையை அளிக்கிறது. ராமா் பாலம் பகுதியில் சுவரை அமைப்பது தொடா்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட உச்சநீதிமன்றத்தை கோரும் வகையில், இந்த மனுவை ஹிந்து தனிநபா் சட்ட வாரியம் தாக்கல் செய்திருந்தது. மேலும் ‘புராதன நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் இடங்கள் மற்றும் எச்சங்கள் சட்டம் 1958’-இன் ஷரத்துகளின் கீழ் ராமா் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிடவும் இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.