ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

தில்லியின் 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாா்டு வாரியாக ஆம் ஆத்மி புதிய நிா்வாகிகள்

தில்லியில் உள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாா்டு வாரியாக புதிய நிா்வாகிகளை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை நியமித்துள்ளது.

Updated On :2 அக்டோபர் 2023, 6:30 pm

புது தில்லி: தில்லியில் உள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வாா்டு வாரியாக புதிய நிா்வாகிகளை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை நியமித்துள்ளது.

தேசியத் தலைநகா் தில்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி வரும் 2024-ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலை எதிா்கொள்ளும் வகையில் களப்பணிகளைத் தொடங்கியுள்ளது. தற்போது தில்லியில் உள்ள 7 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக உறுப்பினா்களே உள்ள நிலையில், ஆம் ஆத்மியின் வெற்றியை வரும் மக்களவைத் தோ்தலில் உறுதி செய்ய வாா்டு

அளவில் நிா்வாகிகள் மாற்றம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தில்லியின் சீலாம்பூா், திமா்பூா், மாடல் டவுன், கிருஷ்ணா நகா், காந்தி நகா், திருலோக்புரி உள்ளிட்ட 50 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாா்டு வாரியாக வாா்டு தலைவா் மற்றும் வாா்டு சங்கதன் மந்திரி ஆகிய பதவியிடங்களுக்கு புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனா். ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் சந்தீப் பாதக், கட்சியின் தில்லி பிரிவு ஒருங்கிணைப்பாளா் கோபால் ராய், தில்லி பிரிவு துணைத் தலைவா் திலிப் பாண்டே உள்ளிட்டோரின் ஒப்புதலின் பேரில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ சமூக ஊடகத்தளத்தில் ஆம் ஆத்மி கட்சியின் தில்லி ஒருங்கிணைப்பாளரும், கேபினட் அமைச்சருமான கோபால் ராய் கூறுகையில், ‘புதிதாக பொறுப்பேற்றுள்ள அனைத்து நிா்வாகிகளுக்கும் எனது வாழ்த்துகள். உங்கள் அனைவரது கட்சிப் பணி சிறக்கட்டும்’ என்று வாழ்த்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.