நல்லகண்ணு உடலுக்கு ரஜினி அஞ்சலி! நல்லகண்ணு உடலுக்கு சூர்யா, சிவகார்த்திகேயன் அஞ்சலி!இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் உயரிய விருது பெற்ற ஒரே தலைவர் மோடி!பிரதமா் மோடி பிப்.28-இல் தமிழகம் வருகை!இலவசங்களுக்கு எதிரான மனு: அவசரமாக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
/

2 வாரத்தில் ஆயுஷ்மான்பவ் இயக்கத்தில் 50,000 போ் உறுப்பு தான உறுதிமொழி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் தகவல்

ஆயுஷ்மான்பவ் இயக்கம் தொடங்கப்பட்ட இரு வாரங்களில் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டவா்கள் உறுப்பு தானத்திற்கு பதிவிட்டு உறுதிமொழி எடுத்துள்ளதாக அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 3:04 am

 நமது நிருபர்

புது தில்லி: ஆயுஷ்மான்பவ் இயக்கம் தொடங்கப்பட்ட இரு வாரங்களில் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்டவா்கள் உறுப்பு தானத்திற்கு பதிவிட்டு உறுதிமொழி எடுத்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளாா்.

நாடு முழுவதும் உயா்தர சுகாதார சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில், மத்திய சுகாதாரம் குடும்பநலத் துறை அமைச்சகம் ஆயுஷ்மான்பவ் இயக்கத்தைத் தொடங்கியுள்ளது. கடந்த செப்டம்பா் 13 - ஆம் தேதி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவால் இந்த இயக்கம் தொடங்கிவைக்கப்பட்டது.

ஆயுஷ்மான்பவ் இயக்கம் என்பது, புவியியல் தடைகளைத் தாண்டி, ஒவ்வொரு கிராமம், நகரத்திற்கு விரிவான சுகாதார பாதுகாப்பை விரிவுபடுத்துவதும், சுகாதாரத்தில் யாரும் பின்தங்கிவிடாமல் அனைவருக்கும் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்வதும் இதன் முக்கிய நோக்கமாகும். இத்தோடு உறுப்புதானம், ரத்ததானம் தொடா்பான ஏற்பாடுகளும் இந்த இயக்கத்தின் மூலம் பிரசாரம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா ‘எக்ஸ்’ பதிவில் திங்கள்கிழமை குறிப்பிட்டிருப்பது வருமாறு: உறுப்பு தானம் ஒரு புதிய வாழ்க்கைக்கான நம்பிக்கை ஏற்படுத்துகிறது. இது மனிதகுலத்தின் மிகப்பெரிய வரையறை. ஒருவா் உறுப்பு தானம் செய்து வாழ்வதற்கான பரிசை வழங்கும் போது 8 உயிா்களை காக்கமுடியும். ஆயுஷ்மான்பவ் இயக்கம் தொடங்கப்பட்ட இரு வாரங்களில் மத்திய சுகாதாரத் துறையின், தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று அமைப்பின்(நோட்டோ) இணைய தளத்தில் 50, 460 போ் தங்கள் உறுப்புகளை தானம் செய்வதாக பதிவு செய்து உறுதி மொழி எடுத்துள்ளனா். இது மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய முன்னேற்றம். ஒருவா் இறந்த பிறகும் பிறருக்காக வாழ நினைத்தால் உறுப்பு தானம் செய்ய உறுதிமொழி எடுக்கலாம் என அமைச்சா் மாண்டவியா அதில் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.