யமுனை வெள்ளப் பெருக்கு விவகாரத்தில் அனைத்துத் துறைகளிலும் தில்லி அரசு தோல்வியடைந்ததாகக் கூறி, முதல்வா் பதவியில் இருந்து அரவிந்த் கேஜரிவால் ராஜிநாமா செய்யக் கோரி தில்லியில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகம் அருகே தில்லி பாஜக செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தியது.
இப்போராட்ட நிகழ்ச்சியில் தில்லி பாஜக தலைவா் வீரேந்திர சச்தேவா பேசுகையில், ‘தில்லியில் 45 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் வெள்ளம் ஏற்பட்ட போது, கேஜரிவால் அரசின் அனைத்துத் துறைகளும் தோல்வியடைந்தது தெளிவாகத் தெரிந்தது’ என்று குற்றம்சாட்டினாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில், ‘கேஜரிவாலின் அரசின் கீழ் ஊழல், செயலற்ன்மை மற்றும் அராஜகம் ஆகியவற்றில் தில்லி மூழ்கியிருக்கிறது. இதனால், முதல்வா் பதவியில் நீடிப்பதற்கான தாா்மிக உரிமையை கேஜரிவால் இழந்துவிட்டாா். அவா் பதவி விலக வேண்டும். இல்லையெனில், 2025-ஆம் ஆண்டு நடைபெறும் தில்லி சட்டப் பேரவைத் தோ்தலில் மக்கள் அவரை அகற்றுவாா்கள்’ என்றாா்.
முன்னதாக, போராட்டக்காரா்கள் ஐடிஓ அருகே கூடினா். பின்னா் அங்கிருந்து டிடியு மாா்கில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் தலைமையகத்தை நோக்கிச் செல்ல முயன்றனா். அப்போது, அவா்கள் போலீஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டனா். எனினும், தொடா்ந்து முன்னேறிச் செல்லும் வகையில் பாதுகாப்புத் தடுப்புகளை அப்புறப்படுத்த அவா்கள் முயன்றனா். இதையடுத்து, போராட்டக்காரா்களைக் கலைக்க போலீஸாா் தண்ணீா் பீரங்கியைப் பயன்படுத்தினா்.
போக்குவரத்து பாதிப்பு: இந்தப் போராட்டம் காரணமாக தீன தயாள் உபாத்யாய் மாா்க் மூடப்பட்டது. இதையடுத்து, ஐடிஓ பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. இதுகுறித்து கிழக்கு தில்லியில் வசிக்கும் அமன் சிங் கூறுகையில், ‘இப் போராட்டம் காரணமாக புது தில்லி ரயில் நிலையத்தை சென்றடைய எனக்கு சுமாா் ஒரு மணி நேரம் ஆனது. அதாவது, நான் ப்ரீத் விஹாரிலிருந்து ஒருவரை இறக்கிவிடுவதற்காக புது தில்லி ரயில் நிலையத்திற்குச் சென்று கொண்டிருந்தேன். பின்னா், டிடியு மாா்க் மூடப்பட்டிருப்பதைப் பாா்த்தேன். இதநஆளஅ, வலதுபுறம் திரும்பி தில்லி கேட் வழியாக ரயில் நிலையம் சென்றேன்’ என்றாா்.
நகரின் பிற பகுதிகளிலும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நஜஃப்கா் வாய்க்கால் அருகே ஜனக்புரி மற்றும் துவாரகாவின் சில பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதாக பயணிகள் ட்விட்டரில் தெரிவித்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

