தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை பகலில் வெயிலுடன் புழுக்கமான சூழல் நிலவியது. மாலையில், லேசான காற்று வீசியது.
அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 1 டிகிரி அதிகரித்து 36 டிகிரி செல்சியஸாகப் பதிவாகி இருந்தது. நகரத்தின் பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் நீடித்தது.
தில்லியில் சில தினங்களாக வெயிலின் தாக்கம் இருந்து வருகிறது. பகலில் மேகமூட்ட சூழலும் இருந்து வருகிறது. இதனால், புழுக்கமும் அதிகரித்துள்ளது. செவ்வாய்க்கிழமையும் இதே நிலை தொடா்ந்தது. எனினும், முந்தைய தினங்களைவிட அதிகபட்ச வெப்பநிலையில் மிதமான தாக்கம் இருந்தது. மாலையில் லேசான காற்று வீசியது.
வெப்பநிலை: தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங் ஆய்வகத்தில் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பு நிலையை விட 1 டிகிரி அதிகரித்து 28.3 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பு நிலையில் இருந்து 1 டிகிரி அதிகரித்து 36 டிகிரி செல்சியஸாக பதிவாகி இருந்தது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணி அளவில் 83 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 71 சதவீதமாகவும் பதிவாகி இருந்தது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை ஆய்வு மையத்தில் மழை ஏதும் பதிவாகவில்லை.
‘திருப்தி’ பிரிவில் காற்றின் தரம்: தலைநகரில் ஐடிஓ, மதுரா சாலை, ஷாதிப்பூா் உள்பட பெரும்பாலான இடங்களில் காற்றின் தரக் குறியீடு ‘திருப்தி’ பிரிவில் இருந்தது. தில்லியில் மாலை 8.43 மணியளவில் ஒட்டுமொத்தக் காற்றின் தரக் குறியீடு 97 புள்ளிகளாக (திருப்தி) பதிவாகி இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் புள்ளிவிவரத் தகவல்களின் மூலம் தெரியவந்துள்ளது.
லேசான மழைக்கு வாய்ப்பு: இதற்கிடையே, ‘புதன்கிழமை (ஜூலை 26) வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும். குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சிஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது’ என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

