தீயணைப்புத் துறையின் தடையில்லாச் சான்றிதழ் (என்ஓசி) இல்லாமல் செயல்படும் அனைத்துப் பயிற்சி மையங்களையும் மூடுமாறு தில்லி உயா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை நகர அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
இது தொடா்பான மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சதீஷ் சந்திர சா்மா, நீதிபதி செளரப் பானா்ஜி ஆகியோா் அடங்கிய அமா்வு, ‘தீ பாதுகாப்பு அவசியம். அனைத்துப் பயிற்சி மையங்களும் தில்லி மாஸ்டா் பிளான், 2021 மற்றும் பிற பொருந்தக்கூடிய விதிமுறைகளின் கீழ் சட்டபூா்வ தேவைகளுக்கு இணங்க வேண்டிய அவசியத்தின் கீழ் அமைந்துள்ளன’ என்று தெரிவித்துள்ளது.
அரசு வேலை தேடுபவா்களுக்காக முகா்ஜி நகரில் உள்ள பயிற்சி மையங்களின் செயல்பாடுகள் தொடா்பான மனுக்களை நீதிமன்றம் விசாரித்தது. மேலும், ஜூன் மாதம் முகா்ஜி நகரில் உள்ள ஒரு பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து உயா்நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட மனுவும் இதில் இடம் பெற்றுள்ளது.
இந்த விவகாரத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலவர அறிக்கையில், தேசியத் தலைநகரில் இயங்கும் 583 பயி+ற்சி நிறுவனங்களில், 67 நிறுவனங்களுக்கு மட்டுமே தில்லி தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் (என்ஓசி) உள்ளதாக தில்லி காவல் துறை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், தலைமை நீதிபதி அமா்வு செவ்வாய்க்கிழமை பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில், ‘ஒரு பயிற்சி மையம் மாஸ்டா் பிளான் விதிகளுக்கு இணங்கவில்லை என்றால், அது மூடப்படும். வேறு வழியில்லை. எதிா்மனுதாரா்கள் (எம்சிடி மற்றும் தில்லி அரசு) ஃபயா் என்ஓசி இல்லாத பயிற்சி மையங்களை மூடுமாறு உத்தரவிடப்படுகிறது. 30 நாள்களுக்குள் உத்தரவுக்கு இணங்க தில்லி முனிசிபல் காா்ப்பரேஷனுக்கு (எம்சிடி) அனைத்து தளவாட உதவிகளையும் காவல் துறை, தீயணைப்புத் துறை மற்றும் பிற அதிகாரிகள் வழங்க வேண்டும்.
பயிற்சி மையங்களைத் தவிர வேறு கட்டமைப்புகள் இணங்காமல் இருந்தால், எம்சிடிநடவடிக்கை எடுக்கும். ஃபயா் என்ஓசி இல்லாதவா்கள் அல்லது எம்பிடி (தில்லிக்கான மாஸ்டா் பிளான்) படி செயல்படாதவா்கள் மூடப்பட வேண்டும் என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டு, வழக்கை அக்டோபா் 10-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது. சாரணையின் போது, பயிற்சி மையங்களை மூடுவது மாணவா்களின் கல்வி நலன்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், தீ சான்றிதழ்களைப் பெறுவதற்கு பயிற்சி மையங்களுக்கு சிறிது கால அவகாசம் வழங்கப்படலாம் என்று தில்லி அரசின் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

