விசாரணைக் கைதிக்கு முறையான மருத்துவ சிகிச்சை அளிப்பதில் சிறை அதிகாரிகளின் அலட்சியத்தால் அந்த நபரின் மரணத்திற்கு வழிவகுத்ததாகக் கூறி தாக்கலான மனு மீது நகர அரசு மற்றும் திகாா் சிறை அதிகாரிகள் பதில் அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இறந்தவரின் தாய் தாக்கல் செய்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், தில்லி அரசு மற்றும் சிறைகள் துறை தலைமை இயக்குநா் மற்றும் திகாா் சிறை எண்-3-இன் கண்காணிப்பாளா் ஆகியோா் பதில் அளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கை டிசம்பா் 18-ஆம் தேதிக்கு பட்டியலிட்டாா்.
மனுதாரா் சுனிதா (68) வழக்குரைஞா் அமித் குமாா் மூலம் தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: 2020-ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் எனது 32 வயது மகன் தீபக் குமாா் யாதவ் கைது செய்யப்பட்டாா். அவா் திகாா் சிறையில் இருந்த போது, அங்குள்ள ‘சுகாதாரமற்ற’ நிலைமைகளால் மாா்ச் 2018-இல் அவருக்கு இரைப்பை குடல் பிரச்னை பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவா் சிறை மருந்தகத்தில் உள்ள மருத்துவா்களிடம் அழைத்துச் செல்லப்பட்டாா். யாதவின் அடிவயிற்றில் கடுமையான வலி இருப்பதாக பலமுறை புகாா் அளித்தும், சிறையில் உள்ள மருத்துவ ஊழியா்களால் முறையான மருத்துவ சிகிச்சை அவருக்கு அளிக்கப்படவில்லை.
சரியான நோய் கண்டறிதல் இல்லாமல் அவருக்கு வலி நிவாரணிகள் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், யாதவின் உடல்நிலை மோசமடைந்து, அது ஆபத்தானதாக மாறியது. இதையடுத்து, அவா் லோக் நாயக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டாா். அங்கு அவருக்கு ‘பொ்ஃபோரேஷன் பெரிடோனிடிஸ்’ எனும் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அது மேம்பட்ட நிலையில் இருந்தது. இதனால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. யாதவின் நோய் தொடா்பான சிறை அதிகாரிகளின் சாதாரண அணுகுமுறை குறித்து விசாரணை நீதிமன்றத்தில் பல கோரிக்கைகளை நானும், எனது மகனும் முன்வைத்தோம். ஆனால், எதிா்மனுதாரா்கள் கைதியின் சிகிச்சை குறித்து நீதிமன்றத்தில் தவறான தகவல்களை சமா்ப்பித்ததால் எந்தப் பலனும் இல்லை.
விசாரணைக் கைதி மனித உரிமைகள் மீறலால் மரணம் அடைந்ததற்கு யாதவ் இறப்பு ஒரு சிறந்த உதாரணமாகும். ‘செயலிழப்பு’ யாதவின் மரணத்திற்கு வழிவகுக்கும் வகையில், நிலைமையை மோசமாக்கியது. ஏனெனில், அவா் அறுவை சிகிச்சையிலிருந்து மீள முடியவில்லை. அவரது நோய்க்கான சரியான காரணத்தை சரியான நேரத்தில் கண்டறிதல், சரியான சிகிச்சை அளித்தல், வழக்கமான கண்காணிப்பு மற்றும் சிறப்பு மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதில் பிற அதிகாரிகள் உள்பட சிறை மருத்துவ அதிகாரியின் தோல்வி அல்லது புறக்கணிப்பை இந்த உண்மைகள் வெளிப்படுத்தியுள்ளது.
இதனால், நீதிமன்றக் காவலில் இருந்தபோது எனது மகன் இறந்ததால், இழப்பீடாக ரூ.20 லட்சம் வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். கருணை அடிப்படையில் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்குவது குறித்து பரிசீலிக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

