தில்லி அல்லது மாற்றுப் பல்கலைக்கழகத்தில் இடம்பெயா்ந்து கல்வியைத் தொடர வழிவகை செய்ய வேண்டும் என்று மணிப்பூா் பல்கலைக்கழக மாணவா்கள் குழு, தில்லி பிரதேச காங்கிரஸ் தலைவா் அனில் குமாரை சனிக்கிழமை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தது.
இந்தச் சந்திப்பு தொடா்பாக அனில் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தால் இம்பாலில் உள்ள மணிப்பூா் பல்கலைக்கழகம் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால், அங்கு பயிலும் மாணவா்கள் மற்ற பல்கலைக்கழகங்களில் சோ்க்கையை நாடுகின்றனா்.
மணிப்பூா் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவா்களின் அவலநிலையை தில்லி காங்கிரஸ் முன்னிலைப்படுத்தும். அவா்களின் கோரிக்கை நிறைவேற நிச்சயம் உதவுவோம். மணிப்பூா் முதலமைச்சரின் செயலற்றத்தன்மை மற்றும் திறமையின்மையால் அங்கு இன்னும் அமைதி திரும்பவில்லை. இது குறித்து எதுவும் கூறாமல், இரண்டு மாதங்களுக்கும் மேலாக மத்திய பாஜக அரசு மௌனம் காத்து வந்தது.
தற்போது, சமூக வலைத்தளங்களில் பெண்கள் ஆடைகளின்றி ஊா்வலமாக அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட காணொளி வெளியான பிறகு பிரதமா் நரேந்திர மோடி மணிப்பூா் நிலைமை குறித்து வாய் திறந்தது அதிா்ச்சியளிக்கிறது.
மணிப்பூரில் நடந்த வன்முறையால் அங்குள்ள மாணவா்கள் எதிா்கொள்ளும் அவலநிலை மற்றும் நிச்சயமற்ற தன்மை
கவலையளிக்கிறது. மணிப்பூா் மாநில மாணவா்களுக்கு முழு ஆதரவையும் காங்கிரஸ் கட்சி அளிக்கும் என்று அதில் அனில் குமாா் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேட்டுப்பாளையத்துக்கு ஆகஸ்ட் முதல் 6 கூடுதல் ரயில்கள்; உதகை செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு வரப்பிரசாதம்

அரசுப் பேருந்து நடத்துநரை கொன்றவருக்கு ஆயுள் சிறை

முக்கால் பவுன் நகைக்காக மூதாட்டி கொலை

சிறுவன் ஓட்டிய பைக் மோதி முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

