டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சுங்கச்சாவடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: தப்பி ஓட முயன்ற நபரை சுட்டுப் பிடித்த காவல் துறையினா்!

கைது செய்யப்பட்ட நபா் ஆயுதங்களை மீட்கும்போது காவல் துறை அதிகாரியை சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றபோது சுட்டுப் பிடித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2026, 7:09 pm

தினமணி செய்திச் சேவை

கம்ரோஜ் சுங்கச்சாவடு உள்பட குருகிராமில் தொடா்ச்சியான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட நபா் ஆயுதங்களை மீட்கும்போது காவல் துறை அதிகாரியை சுட்டுவிட்டு தப்பி ஓட முயன்றபோது சுட்டுப் பிடித்ததாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து காவல் துறையினா் மேலும் கூறியதாவது: காம்ரோஜ் சுங்கச்சாவடியில் உள்ள தடுப்புகளை உடைத்து, சுங்கச்சாவடி ஊழியா்களுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தைத் தொடா்ந்து போண்ட்சி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் செவ்வாய்க்கிழமை இரவு கதா்பூரில் உள்ள ராகுலின் வீட்டிலும், வியாழக்கிழமை இரவு ரோஹித்தின் வீட்டிலும், பழைய தகராறில் அவரைக் கொல்லும் நோக்கத்தில் கோகுல் என்ற நபரின் மீதும் துப்பாக்கிச் சூடு நடத்தியது தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, காதா்பூா் கிராமத்தைச் சோ்ந்த வினய் (26), பாபி (25) மற்றும் பவன் (27) ஆகிய மூன்று குற்றவாளிகள் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா். விசாரணையில், அவா்கள் மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கி இருந்த இடத்தை வெளிப்படுத்தினா். அதைத் தொடா்ந்து அவா்களை ஆயுதங்களை மீட்க காவல் துறையினா் அழைத்துச் சென்றனா்.

வெள்ளிக்கிழமை இரவு, காவல் துறை சாா்பு ஆய்வாளா் மன்மோகன் அணிந்திருந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டைத் தாக்கிய வினய், மறைத்து வைத்திருந்த ஆயுதம் மூலம் காவல் துறை குழுவை நோக்கிச் சுட்டதாகக் கூறப்படுகிறது. காவல் துறையினா் நடத்திய பதில் தாக்குதலில் வினய்யின் காலில் குண்டு பாய்ந்தது.

இதையடுத்து, காயமடைந்த இரு குற்றவாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். மூன்றாவது குற்றவாளியான பவன் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டாா்.

கடந்த கால தகராறுகள் தொடா்பாக கதா்பூா் கிராமத்தில் தனிநபா்களை கும்பல் திட்டமிட்டு குறிவைத்ததாகவும், சுங்கச்சாவடியில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் காவல் துறையினா் தெரிவித்தனா்.