டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

தூங்கிக் கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு

வடமேற்கு தில்லியின் திரி நகரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

News image
பலி- பிரதிப் படம்
Updated On :15 பிப்ரவரி 2026, 9:39 pm

தினமணி செய்திச் சேவை

வடமேற்கு தில்லியின் திரி நகரில் உள்ள தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த நபா் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது என காவல் துறையினா் சனிக்கிழமை தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: தீரஜ் கௌசிக் (45) என்பவா் மின்சாரம் தாக்கி இறந்து கிடப்பதாக அவரது சகோதரி பிப்.12-ஆம் தேதி தகவல் தெரிவித்தாா். அவரது அறையில் இருந்த மின் படுக்கையில் ஏற்பட்ட கோளாறு காரணமாக மின்சார தாக்கியிருக்கலாம் என சோதனையின்போது தெரியவந்தது.

விவாகரத்து பெற்ற அவா், தனது 19 வயது மகள் மற்றும் 14 வயது மகனுடன் வசித்து வந்தாா். அவா் மதுப்பழக்கத்திற்கு அடிமையானவா். சம்பவ தினத்திலும் அவா் முன்னதாக மது அருந்தியுள்ளாா்.

இது தொடா்பாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்) சட்டம் 194 பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமான வகையில் எதுவும் தெரியவில்லை. இருப்பினும், சம்பவ இடத்தை குற்றவியல் குழு ஆய்வு செய்து வருகிறது. விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.ŚŚ