காவிரி வழக்கில் கர்நாடகம் சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர் பொறுப்பில் இருந்து விலகத் தயாராக இருக்கிறோம் என்று மூத்த வழக்குரைஞர் மோகன் கட்டார்கி கூறினார்.
கர்நாடகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் ஃபாலி நாரிமன், அனில் திவான் உள்ளிட்ட மூத்த வழக்குரைஞர்களை வழக்குக்காக நியமிக்கும் பொறுப்பை மோகன் கட்டார்கிக்கு அந்த மாநில அரசு வழங்கியுள்ளது குறிப்
பிடத்தக்கது.
இது தொடர்பாக தினமணி நிருபரிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: காவிரி விவகாரத்தில் கர்நாடகம் சார்பில் ஆஜராகும் வழக்குரைஞர்கள் குழு, கடந்த 23 ஆண்டுகளாக வழக்கில் ஆஜராகும் பொறுப்பில் இருந்து எங்களை விடுவிக்க வேண்டும் என கோரி வந்துள்ளது.
கர்நாடகத்தில் ஒவ்வொரு முறையும் புதிய அரசு அமையும்போது இந்தக் கோரிக்கையை எங்கள் குழு வலியுறுத்தி வந்துள்ளது. அதையேதான் இப்போதும் கூறுகிறோம். எங்களுக்கு கர்நாடக அரசுடன் கருத்து வேறுபாடு இல்லை. எங்களை விட திறமையான வழக்குரைஞர்கள் கிடைத்தால் அவர்களை கர்நாடகம் நியமித்துக் கொள்ளலாம்; எங்களுக்கு ஆட்சேபம் கிடையாது.
கடந்த காலங்களில் எங்கள் மீது கர்நாடக அரசு கொண்டிருந்த நம்பிக்கைக்காக நாங்கள் னநன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறுவதன் மூலம் கர்நாடக அரசுக்கு அமைதியான முறையில் ஒரு செய்தியை நாங்கள் தெரிவித்துள்ளோம்'' என்று மோகன் கட்டார்கி கூறினார்.
காவிரி விவகாரத்தில் கடந்த 7-ம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தவறான தகவலைக் கூறியும் மேலும் மேலும் மனுக்களைத் தாக்கல் செய்தால் அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும் என தமிழகம், கர்நாடகம் ஆகிய மாநில அரசுகள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர்களை எச்சரித்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவை மறுஆய்வு செய்யக் கோரும் மனுவை தாக்கல் செய்ய வேண்டாம் என தில்லியைச் சேர்ந்த மூத்த வழக்குரைஞர்கள் பலர் கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருக்கு அறிவுரை வழங்கியிருந்தனர்.
ஆனால், பல்வேறு நெருக்கடியால் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகத்தின் சார்பில் மறுஆய்வு மனு செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. இந்த விஷயத்தில் கர்நாடக அரசு நெருக்குதல் கொடுத்ததைத் தொடர்ந்து மேற்கண்டவாறு மூத்த வழக்குரைஞர் மோகன் கட்டார்கி கருத்து வெளியிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்!

பங்குச்சந்தை: சென்செக்ஸ் 600 புள்ளிகள் உயர்வு! 25,000 -யை நெருங்கும் நிஃப்டி!

அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா கொடியேற்றம்!
ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்திருக்கிறது பெரம்பூர்! ஏன்? எப்போது?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

