2026 தேர்தலில் அதிகம் கவனம் பெறும் தொகுதிகளில் முதலிடத்தில் இருப்பது பெரம்பூர். இந்த தொகுதி, ஒரே தேர்தலில் 2 எம்எல்ஏக்களை தேர்வு செய்யும் வரலாறு கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.
1957ஆம் ஆண்டு பெரம்பூர் தொகுதியில் நடைபெற்ற பேரவைத் தேர்தலில் இரண்டு எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். ஒரு எம்எல்ஏ பொதுப் பிரிவினராகவும், மற்றொரு எம்எல்ஏ பட்டியலினத்தைச் சேர்ந்தவராகவும் இருந்தார்.
ஒரே தேர்தலில் ஒரே தொகுதிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் தேர்வு செய்யப்பட்டனர். நாடு சுதந்திரம் அடைந்த தொடக்கக் காலத்தில், பட்டியலின மக்களின் பிரதிநிதிகள் தேர்வு செய்ய அப்போதைய தேர்தலில் இந்த நடைமுறை இருந்து வந்துள்ளது. பிறகுதான், பட்டியலின தொகுதிகள் என பிரிக்கப்பட்டன. அதன்பிறகு 1961ஆம் ஆண்டு ஒரு தொகுதிக்கு இரண்டு எம்எல்ஏக்கள் தேர்வு செய்யும் நடைமுறை கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வழக்கமாக அதிக கவனம் பெறும் தொகுதிகளில் பெரம்பூர் அருகே உள்ள கொளத்தூர் தொகுதிதான் இருக்கும். இந்த முறை தவெக தலைவர் விஜய் வருகையால் பெரம்பூர் தொகுதி அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது.
தன்னுடைய அரசியல் வருகையைப் பதிவு செய்ய தவெக தலைவர் விஜய் பெரம்பூருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் நிலையில், தன்னுடைய கோட்டையாக இருக்கும் பெரம்பூரை விட்டுக்கொடுக்கக் கூடாது என திமுகவும் மறுபுறம் களமாடி வருகிறது.
பல முக்கிய நகரங்களில் தேர்தல் பிரசாரங்களை அறிவித்துவிட்டு ரத்து செய்து வரும் தவெக தலைவர் விஜய், தான் போட்டியிடும் தொகுதியில் மட்டும் வீடு வீடாகச் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்துவிட்டு, அங்குள்ள வீடுகளில் விசில் கோலமும் போட்டுள்ளார்.
தவெக சார்பில் கிட்டத்தட்ட 25 முதல் 50 பேர் வரை கொண்ட 15 குழுக்கள் அமைக்கப்பட்டு அவர்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார்கள்.
திமுக வேட்பாளர் ஆர்.டி சேகர், வழக்கமான பிரசாரத்தைக் காட்டிலும் இந்த முறை கூடுதல் நேரம் பணியாற்றி தீவிர பிரசாரம் மேற்கொள்கிறார். ஒருவேளை, பெரம்பூரில் திமுக தோல்வியடைந்தால், அது ஒரு தொகுதியை இழந்ததாக ஆகாது, மாறாக, மாநிலத்தில் திமுகவுக்கு ஒரு புதிய போட்டியாளர் உருவாகியுள்ளார் என்பதை பேரவையில் உரக்கச் சொல்வதாக மாறிவிடும் என்பதே திமுகவுக்கு உள்ள நெருக்கடி என்று கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இன்று விஜய்யின் பெரம்பூர் பிரசாரம் ரத்து!
பெரம்பூர் வாக்குப்பதிவு இயந்திரத்தில் தவெக தலைவர் விஜய் பெயர் எங்கே இடம்பெறும்?
பெரம்பூர்: வீடு வீடாக வாக்கு சேகரித்த விஜய்!

பெரம்பூர், கொளத்தூரில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி!
வீடியோக்கள்

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

