அசாமில் 1,855 தீவிரவாதிகள் சரண்
குவாஹாட்டி, ஜன. 25: அசாம் மாநிலம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் 1,855 தீவிரவாதிகள் சரண் அடைந்தனர். ஆதிவாசி மக்கள் ராணுவம், அகி


குவாஹாட்டி, ஜன. 25: அசாம் மாநிலம் குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் முன்னிலையில் 1,855 தீவிரவாதிகள் சரண் அடைந்தனர்.
ஆதிவாசி மக்கள் ராணுவம், அகில ஆதிவாசி தேசிய விடுதலை ராணுவம், சந்தால் புலிப்படை, பிர்ஸô கமாண்டோ படை, அசாம் ஆதிவாசி கோப்ரா ராணுவம், குக்கி விடுதலை ராணுவம், மார் மக்கள் அமைப்பு, ஐக்கிய குக்கிகாம் பாதுகாப்பு ராணுவம், குக்கி புரட்சிகர ராணுவம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் சரண் அடைந்தனர்.
அவர்களை வரவேற்று ப.சிதம்பரம் பேசியதாவது: இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள். வன்முறைப் பாதையைத் தேர்ந்தெடுத்த இவ்வளவு அதிகமானபேர் அதைக் கைவிட்டு சரணடைவதை இதற்கு முன் கண்டதில்லை. இந்தியாவில் உள்ள மற்ற குடிமக்களைப் போல உங்களையும் அசாம் அரசும், மத்திய அரசும் கெüரவமாக நடத்தும்.
எல்லாவிதமான கருத்து வேறுபாடுகளையும் பேச்சுவார்த்தை, கலந்தாலோசனைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியும்.உல்பா உள்ளிட்ட மற்ற தீவிரவாத இயக்கங்களுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அவர்களும் வன்முறையைக் கைவிடுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் ப.சிதம்பரம்.
சரணடைந்தவர்களில் ஒருவரான அசாம் ஆதிவாசி கோப்ரா ராணுவத் தலைவர் ஜாவேரெஸ் காகா செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆயுதம் தாங்கிய போராட்டத்தால் பெரிய பயன் விளையாது என்பதை உணர்ந்துவிட்டோம். எங்களது உணர்வுகளுக்கு மதிப்பளித்து எங்களது பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் மத்திய, மாநில அரசுகள் தீர்க்கும் என முழுமையாக நம்புகிறோம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...