புது தில்லி, செப். 25: அது மக்களவைத் தேர்தல் அல்ல. சட்டப் பேரவைத் தேர்தலோ, மாநகராட்சித் தேர்தலோ அல்ல. ஆனால், தில்லிவாழ் தமிழர்களிடையே பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியது.
பல ஆண்டுகளாக எளிய முறையில் நடைபெற்றுவந்த தில்லித் தமிழ் சங்கத் தேர்தல் கடந்த ஆண்டைப் போலவே விறுவிறுப்பாக அமைந்தாலும், வாக்குப் பதிவு முழுவதும் கேமராவில் பதிவு செய்யப்பட்டது. வாக்காளர்களின் அடையாள அட்டை சோதனை, வாக்கு எண்ணிக்கைக்கு தனித் தனிப் பிரிவு ஆகியவை இந்த ஆண்டின் சிறப்புகளாகும்.
தில்லித் தமிழ்ச் சங்கத்தின் 15 வது தலைவராக மூத்த வழக்குரைஞர் கிருஷ்ணமணி, துணைத் தலைவராக ரமாமணி சுந்தர், பொதுச் செயலாளராக முகுந்தன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தில்லித் தமிழ்ச் சங்கத்துக்கு துணைத் தலைவர், பொதுச் செயாளர் உள்பட 8 பதவிககளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தில்லித் தமிழ்ச் சங்க வளாகத்தில் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்த மத்திய வர்த்தகத் துறை அமைச்சகத்தின் இணை இயக்குநர் விஜய் ராஜ்மோகன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். செயலக பயிற்சி மற்றும் மேலாண்மை நிறுவனத்தின் துணை இயக்குநர் கோவிந்தராஜூலு, முன்னாள் அயலுறவுப் பணி அதிகாரி கனகசபேசன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
வாக்குப்பதிவு, எண்ணிக்கை முழுவதும் கேமராக்களில் பதிவு செய்யப்பட்டது. காலை 8.30 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மதியம் 2 மணிக்கு முடிவுபெற்றது. வாக்காளர்கள் காலதாமதம் ஏற்படாமல் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய 5 பூத்கள் அமைக்கப்பட்டன.
தில்லித் தமிழ்ச் சங்க உறுப்பினர் அடையாள அட்டையுடன் அரசால் வழங்கப்பட்ட புகைப்பட அடையாள அட்டையைக் காண்பித்த பின்னர்தான் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர். உறுப்பினர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தங்கள் உறுப்பினர் எண்ணைக் குறிப்பிட்டனர். அவர்களின் விவரங்கள் சரிபார்த்த பின்னர் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.
வாக்குப்பதிவு தொடங்கிய உடனே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். 10 மணிக்குள் அதிகபடியான வாக்குகள் பதிவாயின. வாக்காளர்கள் அனைவரும் காமிராக்களில் பதிவு செய்யப்பட்டனர். இதனால் கள்ள ஓட்டுகள் போடப்படுவது தடுக்கப்பட்டது.
தமிழ்ச் சங்கத் தலைவர், துணைத் தலைவர், பொதுச் செயலாளர், இணைச் செயலாளர் (2 பதவிகள், 1 பெண்), பொருளாளர், இணைப் பொருளாளர், குழு உறுப்பினர்கள் ( 10 பேர், 2 பெணகள்), பேனல் உறுப்பினர்கள் (2 பேர்) என்று 8 பதவிகளுக்கு 43 வேட்ளார்கள் போட்டியிட்டனர். மதியம் இரண்டு மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. இரண்டு மையங்களில் வாக்குகள் எண்ணப்பட்டன.
ஒவ்வொரு வாக்கும் கேமராவில் பதிவு செய்யப்பட்டு கணக்கெடுப்பு நடைபெற்றது.
தில்லித் தமிழ் சங்கத் தேர்தலில் கேமரா பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை உறுப்பினர்கள் உடனுக்குடன் தெரிந்து கொள்ள வெளியில் திரை அமைக்கப்பட்டது. தங்கள் ஆதரவாளரின் வாக்குகளைக் கண்டு உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர். இதனால் தில்லித் தமிழ்ச் சங்கம் நாள் முழுவதும் திருவிழாப் போல் காணப்பட்டது.
வாக்கு வித்தியாசம்: தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எம்.என். கிருஷ்ணமணி, ஜி.பாலச்சந்திரன் ஆகியோருக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் 28 வாக்கு வித்தியாசத்தில் எம்.என். கிருஷ்ணமணி வெற்றி பெற்றார். எம்.என். கிருஷ்ணமணி 394 வாக்குகளும் ஜி.பாலச்சந்திரன் 366 வாக்குகளும் பெற்றனர். துணைத் தலைவர் பதவியை ரமாமணி சுந்தர் கைப்பற்றினார். அவருக்கு எதிராகப் போட்டியிட்ட வேட்பாளர் துரையை 31 வாக்குவித்தியாசத்தில் அவர் தோற்கடித்தார்.
ரமாமணி சுந்தர் மொத்தம் 375 வாக்குகள் பெற்றார். துரை 344 வாக்குகள் பெற்றார். நாகராஜன் 29 வாக்குகள் பெற்றார். பொதுச் செயலாளர் பதவியை முகுந்தன் கைப்பற்றினார். அவருக்கு எதிராக போட்டியிட்ட பென்னேஸ்வரனை விட 147 வாக்குகள் அதிகமாக பெற்றார். முகுந்தன் 430 வாக்குகளும், பென்னேஸ்வரன் 283 வாக்குகளும் நடேசன் 31 வாக்குகளும் பெற்றனர்.
தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் இனிப்புகளை வழங்கியும் பட்டாசுகளை வெடித்தும் கொண்டாடினர். தில்லிச் தமிழ்ச் சங்க வளாகத்தில் டோல் இசை வாதியங்கள் இசைக்கப்பட்டன.
தில்லித் தமிழ்ச் சங்கத்தில் மொத்தம் 1950 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 779 பேர் மட்டுமே தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 800 உறுப்பினர்கள் வாக்குப்பதிவு செய்தனர்.
கடந்த காலங்களில் போட்டி இன்றி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட பதவி தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர். தற்போது தில்லித் தமிழ்ச் சங்கம் வளர்ச்சி அடைந்து உள்ளது. இதனால் சங்கத்தை நிர்வகிக்கும் பதவிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதை 2005 ஆண்டு நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்படுவதில்லை. இதன் காரணமாக வாக்குப் பதிவு குறைவாக உள்ளது. இனி வரும் புதிய நிர்வாகம் புதிய உறுப்பினர்களைச் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலர் வலியுறுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

