புது தில்லி, செப். 18: கூடங்குளம் அணுமின் நிலையம் கூடாது என்று போராடும் மக்களிடம் முதல்வர் ஜெயலலிதா பேச முன்வர வேண்டும் என்று சமூக ஆர்வலர் மேதா பட்கர் வேண்டுகோள் விடுத்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களை திங்கள்கிழமை (செப்.19) சந்திக்கிறார் மேதா பட்கர்.
"தினமணி' செய்தியாளருக்கு மேதா பட்கர் அளித்த பேட்டி விவரம்:
ஜப்பான், பிரான்ஸ் போன்ற வளர்ந்த நாடுகள் புதிய அணுமின் நிலையங்களைத் தொடங்குவதை நிறுத்தியுள்ளனர். இதற்கு அந்த நாடுகள் அணுமின் நிலையங்களினால் சந்தித்த பேரழிவுகள்தான் காரணம்.
இது போன்ற பேரழிவுகளின் மூலம் இந்திய அரசு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும். இது ú பான்ற திட்டங்கள் தொடங்குவதற்கு முன்பு அப்பகுதி மக்களிடம் பேச்சு நடத்த வேண்டும். போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். இது கண்டிக்கத்தக்கது. அணு சக்தியினால் உலகமே பெரும் ஆபத்தைச் சந்திக்க உள்ளது. இதை மத்திய அரசு உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த மக்களைச் சந்திக்க திங்கள்கிழமை திருநெல்வேலி செல்கிறேன். அவர்களுக்கு ஆதரவாக நானும் போராட்டத்தில் ஈடுபட உள்ளேன். நீண்ட நாள்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அப்பகுதி மக்களை அழைத்து ஜெயலலிதா பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
இந்த திட்டத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உதவிகளைப் பெற மத்திய அரசிடம் பேச்சு நடத்த
ஜெயலலிதா முன்வர வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார் மேதா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

