பழங்காலத்தில் சித்தர்களும்,
யோகிகளும் தண்ணீரில் நடந்தனர் என்று புராணங்களில் கூறப்படுவதுண்டு.
விஞ்ஞான வளர்ச்சி காரணமாக, மனிதன் சந்திரனில் கால் பதித்துவிட்டான். ஆனால்
நீரில் நடக்கும் திறமை இன்னும் மனிதனுக்குக் கைவரப் பெறவில்லை.
தண்ணீரைப் பார்த்தாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, பெரும்பாலானோர் குதித்து விளையாட ஆசைப்படுவதுண்டு.
புராணக் கதைச் சம்பவங்கள் போல யதார்த்தத்தில் நிகழாவிட்டாலும், "புரானா கிலா' என்று அழைக்கப்படும் பழைய கோட்டை பகுதியில் என்ற பெயரில் தில்லி அரசு தொடங்கியுள்ள புதிய விளையாட்டு தண்ணீரில் நடக்கவேண்டும் என்ற ஆசையைத் தீர்க்கும் விதமாக அமைந்துள்ளது.
தண்ணீரில் நடக்க முடியுமா? என்று கேட்பவர்களுக்கு "தண்ணீரில் நடக்கும் பந்து' என்ற பெயரில் புரானா கிலா ஏரியில் தொடங்கப்பட்டுள்ள இந்த விளையாட்டு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அப்படி என்ன விளையாட்டு என்று கேட்கிறீர்களா?
தண்ணீரில் மிதக்கும் ராட்சத பந்துக்குள் மனிதர்கள்: தண்ணிரில் மிதக்கும் வகையிலான 6 அடி சுற்றளவுள்ள ஒரு ராட்சஷ பந்து. தண்ணீரில் நடக்க விரும்புபவர் அந்தப் பந்துக்குள் அமர வேண்டும். பின்னர், இயந்திரம் மூலம் அந்தப் பந்தில் பிராண வாயு நிரப்பப்படும். மூன்று நிமிடங்களில் காற்று நிரப்பப்பட்டு, பந்து விஸ்வரூபம் எடுக்கிறது. பந்துக்குள் தண்ணீர் நுழைந்துவிடாமல் தடுக்கும் வகையில் பந்தின் துவாரம் இறுக்கமாக மூடப்பட்டுவிடு
கிறது.
அதன் பின்னர், உள்ளிருக்கும் மனிதருடன் அந்தப் பந்து மெதுவாகத் தண்ணீரில் இறக்கி விடப்படுகிறது. தொடக்கத்தில், பந்துக்குள் இருப்பவர் தள்ளாடுகிறார். அதன் பிறகு, பந்துக்குள்ளேயே எழுந்து நிற்க முயற்சி செய்கிறார். அப்போதுதான், தண்ணீரில் பந்து உருண்டு நகரும் போது அதனுடன் இணைந்து பந்துக்குள் நடக்க முடியும். அது, தண்ணீரில் நடப்பதைப் போன்ற அனுபவத்தைத் தருகிறது.
இல்லையென்றால், பந்துக்குள்ளேயே தலைக்குப்புறக் கவிழ்ந்து "சம்மர் ஷாட்'தான் அடிக்க நேரிடும்.
ஒரு துளி தண்ணீர் கூட மேலே படாமல், இந்தத் "தண்ணீரில் நடக்கும் பந்தில்' நடை பயணம் செய்யலாம் என்பது இதன் சிறப்பம்சம். இந்தத் "தண்ணீர்ப் பந்தில்' பயணம் செய்ய வயது வரம்பு கிடையாது.
பசுமை சூழந்த புராணா கிலா பகுதியில் தண்ணீரில் ராட்சத பந்துக்குள் இருந்தபடியே தண்ணீர் மீது நடப்பதைப் பார்த்தால், பிரம்மாண்டமான முத்து தண்ணீரில் மிதப்பது போலவும், அதனுள் ஒருவர் நிற்பது போலவும் காட்சியளிக்கிறது.
நிஜமாகவே தண்ணீர் மீது நடப்பது போன்ற அனுபவம்: பந்துக்குள் இருப்பவர்கள் அதனுள் நடப்பதற்காக செய்யும் முயற்சி, கரையில் இருந்து அவர்களைப் பார்ப்பவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்
கிறது.
"கயிற்றால் பந்து கட்டப்பட்டிருப்பதால் கரைக்குத் திரும்புவது எளிது. இந்தக் காட்சியைக் காண மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. உண்மையிலேயே தண்ணீரில் நடப்பதைப் போன்ற சுவாரசியமான அனுபவத்தை இந்த விளையாட்டு தருகிறது' என்கிறார் "நீரில் நடந்து' சென்று திரும்பிய மாணவர் அபிஷேக் தெரிவித்தார்.
"இந்த விளையாட்டு குதூகலாமாக இருந்தது. மூன்று சம்மர் ஷாட் அடித்தேன். ஆனாலும், தண்ணீர் மீது பந்துக்குள் நடக்க முடிந்தது' என்று மாணவன் தினேஷ் தெரிவித்தார்.
அரசு தொடங்கிய இந்த விளையாட்டை நடத்திவரும் ராஜீவ் கூறியது:
ஐரோப்பிய நாடுகளில் இந்த விளையாட்டு பிரபலமானது. இந்தியாவில் அசாம் மாநிலத்தில் 4 மாதங்களுக்கு முன் இதைத் தொடங்கினோம். சுற்றுலாப் பயணிகளிடம் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. தில்லிவாசிகளிடமும் இந்த விளையாட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பந்துக்குள் செல்பவர்கள் கூர்மையான உலோக பொருட்களை வைத்திருக்கக்கூடாது. கர்ப்பமானவர்கள் இந்த விளையாட்டுக்கு அனுமதிக்கப்படுவதில்லை. தற்போது 4 பந்துகள் உள்ளன. பந்துகளில் நிரப்பப்படும் காற்று 45 நிமிடங்கள் வரை தாக்குப் பிடிக்கும்.
ரூ. 50 கட்டணம் ; 15 நிமிடங்கள் நடக்கலாம்: இந்த விளையாட்டில் பங்கேற்க, பெரியவர்களுக்கு ரூ. 50 வசூலிக்கப்படுகிறது. 15 நிமிணநஈஅஅஅஅடங்கள் வரை பந்தில் பயணம் செய்யலாம். பள்ளிச் சிறுவர்களுக்கு சலுகை உண்டு.
இந்த தண்ணீர்ப் பந்தில் 15 நிமிடங்கள் நடப்பது டிரெட் மில்லில் 30 நிமிடங்கள் நடப்பதற்குச் சமம்' என்கிறார் ராஜீவ்.
மேலும் 2 இடங்களில்... இதே போன்ற சாகசத் தண்ணீர் நடைப்பயண விளையாட்டு இந்தியா கேட் அருகில் உள்ள குளத்திலும், மாடல் டவுன் குளத்திலும் விரைவில் தொடங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்களிக்க சொந்த ஊர் செல்வோர் கவனிக்க... சிறப்பு ரயில் இயக்கம்!

இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

