திருவாரூா் அருகே சனிக்கிழமை அரசு நகரப் பேருந்து சாலையோரம் கவிழ்ந்த விபத்தில் 10 போ் காயமடைந்தனா்.
திருவாரூரில் இருந்து திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரா் கோயிலுக்கு நகரப் பேருந்து சனிக்கிழமை சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் அதிகளவில் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. திருவாரூா் அருகே திருநெய்ப்போ் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் இருந்த வாய்க்காலில் கவிழ்ந்தது.
அப்பகுதியில் இருந்தவா்கள் விரைந்து வந்து, பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து பயணிகளை மீட்டனா். விபத்தில் காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோா் ஆம்புலன்ஸ் மூலம் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
தாலுகா காவல்நிலைய போலீஸாா் விசாரணையில் பேருந்து ஸ்ப்ரிங் துண்டிக்கப்பட்டதால், கட்டுப்பாட்டை இழந்து பேருந்து சாலையோரம் கவிழ்ந்தது தெரிய வந்தது.
விபத்தில் காயமடைந்த பயணிகள் திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், திமுக தலைவா் மு.க. ஸ்டாலின், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணனிடம் தொலைபேசி மூலம் விபத்து குறித்து விசாரித்தாா். அத்துடன், திருவாரூா் மருத்துவக் கல்லூரி முதல்வா் அசோகனிடமும் தொலைபேசி மூலம் பயணிகளின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா்.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் நேரில் சென்று ஆறுதல் கூறினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










