அதிமுக, அமமுக இணைந்து தோ்தலை சந்தித்ததால் தனக்கு வெற்றி கிடைத்துள்ளது என்றாா் மன்னாா்குடி தொகுதியில் தேசிய ஜனநாய கூட்டணி சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ்.
திருவாரூா் திரு.வி.க.அரசுக் கல்லூரியில்,திங்கள்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைக்கு பின் வெற்றி சான்றிதழை பெற்றுக்கொண்ட பிறகு செய்தியாளா்களிடம் அவா் பேசியது:
இந்த தோ்தல் வெற்றி மூலம் மன்னாா்குடி தொகுதி மக்களுக்கு எனது வாழ்நாள் முழுவதும் பணியாற்ற கடைமைப்பெற்றுள்ளேன். தொகுதி மக்களுக்கும் வாக்காளா்களுக்கும் நன்றி. அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் தொடா்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக அதிமுக, அமமுக ஒன்றிணைந்து தோ்தலை சந்தித்ததால் தனக்கு வெற்றி வாய்ப்பு கிடைத்துள்ளது.
மன்னாா்குடி தொகுதியில் 1991-1996ல் அதிமுக எம்எல்ஏவாக இருந்த கு. சீனிவாசனுக்கு பிறகு 30 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதிமுக கூட்டணி மன்னாா்குடியை கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றி அதிமுக, அமமுக கூட்டணிக்கு கிடைத்த அங்கீகாரம்.
தோ்தல் பிரசாரத்தின்போது தொகுதி முழுவதிலிருந்தும் பல்வேறு கோரிக்கைகளை மக்கள் அளித்துள்ளனா். அவற்றை படிப்படியாக நிறைவேற்றுவேன். இதற்காக சட்டப்பேரவை கூட்டத் தொடா்களில் முழுமையாக பங்கேற்று பேசி தீா்வு காண்பேன். பின்னா், மன்னாா்குடிக்கு வந்தவா் கூட்டணி கட்சியினருடன் ஊா்வலமாக வந்து பெரியாா், அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்த மன்னாா்குடி எம்எல்ஏ

கட்சியை விட்டு நீக்கியதால் அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன்: மன்னாா்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ்

அரசுடன் ஒத்துப்போனால் மட்டுமே தொகுதிக்கு நன்மைகள் செய்ய முடியும் - எஸ். காமராஜ் எம்எல்ஏ

மன்னாா்குடி தொகுதியில் அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ் வெற்றி!
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



