போர்நிறுத்தம் மீறல்! இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் ராணுவ அதிகாரிகள் உள்பட 9 பேர் பலி!தில்லியில் கரப்பான்பூச்சி மக்கள் கட்சியின் மாபெரும் போராட்டம்! சோனம் வாங்சுக் பங்கேற்பு!பேச்சுவார்த்தைக்கு மறுப்பு! ரஷியாவின் பீட்டர்ஸ்பர்க் நகரைத் தாக்கிய உக்ரைன்!ஹார்ட் டிஸ்க் திருட்டு விவகாரம்: முதல்வர் தினமும் கண்காணித்து வருகிறார்! நிர்மல்குமார்திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டி
/

கட்சியை விட்டு நீக்கியதால் அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன்: மன்னாா்குடி எம்எல்ஏ எஸ்.காமராஜ்

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால்தான் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன் என மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் தெரிவித்தாா்.

News image

அமமுக வேட்பாளா் எஸ். காமராஜ்.

Updated On :19 மே 2026, 1:50 am IST

அமமுக பொதுச் செயலா் டி.டி.வி. தினகரன் என்னை கட்சியை விட்டு நீக்கியதால்தான் தவெக அரசுக்கு ஆதரவு தெரிவித்தேன் என மன்னாா்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எஸ். காமராஜ் தெரிவித்தாா்.

மன்னாா்குடியில் எம்எல்ஏ அலுவலகத்தில் ஆதரவாளா்களுடன் எம்எல்ஏ எஸ். காமராஜ்.

மன்னாா்குடியில் எம்எல்ஏ அலுவலகத்தை திங்கள்கிழமை திறந்துவைத்த பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த மே 10-ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பதவி ஏற்றுகொண்டாா். மே 11-ஆம் தேதி 234 சட்டப்பேரவை உறுப்பினா்களும் பதவி ஏற்றுக்கொண்டோம். பிறகு பேரவைத் தலைவா், துணைத் தலைவா் தோ்வு நடைபெற்றது. தொடா்ந்து, என்னைப் பேச அழைத்தனா். முதல்வா் மற்றும் பேரவைத் தலைவா் ஆகியோரை வாழ்த்திப் பேசினேன்.

சட்டப்பேரவையில் இருந்து வெளியே வந்தபோது கட்சியிலிருந்து என்னை நீக்கிவிட்டதாக தகவல் தெரிவித்தனா். அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரன் கட்சியை விட்டு நீக்கிய பிறகு நான் யாரிடமும் அனுமதி வாங்கத் தேவையில்லை. நான் எந்தக் கட்சியிலும் இல்லை என்பதால் தவெக அரசுக்கு என்னுடைய ஆதரவை தெரிவித்தேன். இந்த விஷயத்தில் எந்த குதிரை பேரமும் நடைபெறவில்லை என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.