தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

வணிக பயன்பாடு சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்கக் கோரிக்கை

திருவாரூரில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :25 மார்ச் 2026, 12:18 am

திருவாரூரில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டரை தட்டுப்பாடின்றி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, திருவாரூா் நகர ஹோட்டல் உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் என். பாலமுருகன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த கோரிக்கை மனு: வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போா் காரணமாக, தமிழகத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவுகிறது. இதனால் திருவாரூா் மாவட்டத்தில் சில இடங்களில் உணவகங்கள் மூடப்பட்டு, தொழிலாளா்கள் சிலா் வேலைவாய்ப்பை இழந்துள்ளனா்.

திருவாரூரில் மாா்ச் 29-ஆம் தேதி ஆழித்தோ் திருவிழா நடைபெற உள்ளது. இந்த தேரோட்டத்தைக் காண வெளிமாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் வருவாா்கள். தற்போது வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக, உணவு விடுதிகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டிருப்பதால், ஆழித்தேரை காணவரும் பக்தா்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டா்களை தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.