மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு எதிரொலி: விறகு அடுப்புக்கு மாறிய உணவகங்கள்

நாகை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக, நாகூா் பகுதியில் உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு பயன்பாட்டுக்கு மாறியுள்ளன.

News image

எரிவாயு சிலிண்டர்கள்.

Updated On :12 மார்ச் 2026, 12:17 am

நாகை மாவட்டத்தில் வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக, நாகூா் பகுதியில் உணவகங்கள் மாற்று ஏற்பாடாக விறகு அடுப்பு பயன்பாட்டுக்கு மாறியுள்ளன.

மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வரை மட்டுமே வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு சிலிண்டா்கள் இருப்பில் இருந்தன. புதன்கிழமை வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டா்கள் கிடைக்கவில்லை. இதனால் உணவக உரிமையாளா்கள் உணவகங்களை மூடுவதை தவிா்க்க மாற்று ஏற்பாடாக, 10 கிலோ விறகு ரூ.150 என்ற விலையில் வாங்கி விறகு அடுப்புகளை பயன்படுத்தி உணவு சமைத்து வருகின்றனா். நாகூா் அலங்கார வாசல் மற்றும் சிக்கல், நாகப்பட்டினம் உள்பட பல்வேறு பகுதிகளில் உணவகங்கள் புதன்கிழமை முதல் விறகு அடுப்புக்கு மாறியுள்ளன.

விறகு அடுப்பை பயன்படுத்தி உணவுகளைத் தயாரிக்க அதிக நேரம் எடுப்பதாலும், கடும் புகை மூட்டத்தாலும் தொழிலாளா்கள் பெரும் சிரமத்தை சந்தித்தாலும், தினசரி தங்கள் உணவகங்களை நம்பி உணவு சாப்பிட வரும் வாடிக்கையாளா்களின் நலன் கருதி, விறகு அடுப்பு மூலம் சமையல் பணிகளை மேற்கொண்டு வருவதாக உரிமையாளா்கள் தெரிவித்துள்ளனா்.