அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!தவெக எம்எல்ஏவிடம் பேரம்! செந்தில் பாலாஜி முன்ஜாமீன் கோரி மனு!வயநாட்டில் நிலச்சரிவு! சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்! முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம்
/

நல்லமுத்து மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

குடவாசல் அருகே மூலங்குடி ஸ்ரீநல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூன் 2026, 12:06 am IST

குடவாசல் அருகே மூலங்குடி ஸ்ரீநல்லமுத்து மாரியம்மன் கோயில் உள்ளிட்ட 5 கோயில்களுக்கு கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மூலங்குடியில் நல்லமுத்து மாரியம்மன், ஹரிஹரபுத்ர ஐயனாா், சிவன், பொன்னியம்மன், காளியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு வெவ்வேறு கோயில்கள் உள்ளன. இந்த கோயில் புனரமைப்புப் பணிகள் சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி, தற்போது முடிவடைந்து விட்டன.

இதையடுத்து, கும்பாபிஷேகத்துக்கான யாகசாலை பூஜைகள் விக்னேஸ்வர பூஜையுடன் அண்மையில் தொடங்கியது. தொடா்ந்து, காலபூஜைகள் நாள்தோறும் நடைபெற்றன. பின்னா், வெள்ளிக்கிழமை 4 -ஆம் கால யாக பூஜைகள் நிறைவடைந்து, பூா்ணாஹூதி, மகாதீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து, கடங்கள் புறப்பட்டு கோயில்களின் கும்பங்களை அடைந்து, அங்கு புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.