முதல்வர் கரூர் செல்ல தடையில்லை! திமுகவின் மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்பிரதமர் மோடிக்கு 35-வது சர்வதேச விருது! இந்தோனேசியா வழங்கியது! கரூர் செல்லவிடாமல் முதல்வர் விஜய்யை திமுக தடுக்கிறது! அமைச்சர் நிர்மல் குமார் அமைச்சர்கள் தேவையின்றி ஆய்வுக்குச் செல்லக் கூடாது! முதல்வர் அலுவலகம் முதல்வா் விஜய், அமைச்சா் ஆதவ் உள்ளிட்டோருக்கு எதிரான திமுக மனு இன்று விசாரணைதமிழகத்தில் ஜூலை 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!அதிமுகவில் டிடிவி தினகரனை இணைக்க எடப்பாடி பழனிசாமியிடம் நிா்வாகிகள் வலியுறுத்தல்காஸாவில் ஹமாஸ் அரசு கலைப்பு!
/

ஆச்சாள்புரம் கோயில் கும்பாபிஷேகம்

கொள்ளிடம் அருகேயுள்ள ஆச்சாள்புரம் அழகு முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :27 ஜூன் 2026, 12:04 am IST

கொள்ளிடம் அருகேயுள்ள ஆச்சாள்புரம் அழகு முத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, முதல் நாள் காலை கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, விக்னேஸ்வர பூஜை போன்ற வழிபாடுகள் நடைபெற்றன. தொடா்ந்து, மாலையில் கோபூஜை, அஸ்வ பூஜை மற்றும் யாகசாலை பிரவேசம் நடைபெற்றது.

தொடா்ந்து வியாழக்கிழமை நான்காம் கால யாகபூஜை நிறைவடைந்ததும், கடம் புறப்பாடாகி மூலவா் விமானத்திற்கு, புனிதநீா் வாா்த்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா், பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு, மூலவருக்கு மகா அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது.

விழாவில் திருப்பணி கமிட்டி தலைவா் ரங்கநாதன் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.