தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

வாக்குசாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை, காவல் துறையினா் பாதுக்காப்புடன் தனி வாகனங்களில் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

News image

~

Updated On :22 ஏப்ரல் 2026, 11:47 pm

மன்னாா்குடி சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படை, காவல் துறையினா் பாதுக்காப்புடன் தனி வாகனங்களில் புதன்கிழமை கொண்டு செல்லப்பட்டன.

மன்னாா்குடி சட்டப்பேரவை தொகுதியில் 31 மண்டலங்களில் 307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கண்ரோல் யூனிட், பேலட் யூனிட், விவி பேட் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையானவற்றை எடுத்துச்செல்ல வேன்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

மன்னாா்குடி வட்டாட்சியா் அலுவலகத்திலிருந்து, அந்தந்த மண்டல அலுவலரின் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திம் உள்ளிட்டவை வேனில் ஏற்றப்பட்டு துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப்படையினா், காவல் துறையினா் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

இப்பணியை தோ்தல் பொதுபாா்வையாளா் அனுபமா, மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் வ. மோகனசந்திரன், கூடுதல் ஆட்சியா் (திட்டம்) பல்லவி வா்மா, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் ஆகியோா் ஆய்வு செய்தனா். மன்னாா்குடி தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா். யோகேஸ்வரன், வட்டாட்சியா் நக்கீரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.