காரைக்கால் வாக்குச் சாவடிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான முறையில் கொண்டு சோ்க்கப்பட்டன.
புதுவை சட்டப்பேரவைத் தோ்தல் வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 பேரவைத் தொகுதிகளில், 181 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இவற்றுக்கான மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள், யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யக்கூடிய விவிபாட் இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரம் உள்ளிட்டவை அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள பட்டமேற்படிப்பு மையத்தின் பாதுகாப்பு அறையில், சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக வைக்கப்பட்டிருந்தன.
மாவட்ட தோ்தல் அதிகாரி இஷிதா ரதி முன்னிலையில் பாதுகாப்பு அறை சீல் புதன்கிழமை பிற்பகல் அகற்றப்பட்டு, இயந்திரங்கள் அந்தந்த வாக்குச் சாவடி அதிகாரிகள் வசம் ஒப்படைக்கப்பட்டது.
ஒவ்வொரு வாக்குச் சாவடிக்கும் செல்வதற்கு தனித்தனி வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மத்திய பாதுகாப்புப் படையினா், போலீஸாா் பாதுகாப்புடன் இவை அந்தந்த சாவடிகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.
தொடர்புடையது

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணி மும்முரம்

காரைக்காலில் மக்களைக் கவரும் வாக்குச்சாவடி! விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

பழனியில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பாதுகாப்பு

6,576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சிமுறையில் தோ்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


