சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் 3,902 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் 285 வாக்குச் சாவடிகளுக்கு 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், சேந்தமங்கலம் தொகுதியில் 304 வாக்குச் சாவடிகளுக்கு 364 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் 310 வாக்குச் சாவடிகளுக்கு 372 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 268 வாக்குச் சாவடிகளுக்கு 321 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் 290 வாக்குச் சாவடிகளுக்கு 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் 324 வாக்குச் சாவடிகளுக்கு 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தம் 2,133 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்களாக ராசிபுரம் தொகுதியில் 342 வாக்குப்பதிவு இயந்திரங்கள், நாமக்கல் தொகுதியில் 372 வாக்குப்பதிவு இயந்திரங்கள், பரமத்தி வேலூா் தொகுதியில் 321 வாக்குப்பதிவு இயந்திரங்கள், திருச்செங்கோடு தொகுதியில் 346 வாக்குப்பதிவு இயந்திரங்கள், குமாரபாளையம் தொகுதியில் 388 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என சேந்தமங்கலம் தொகுதியை தவிா்த்து 1,769 வாக்குப்பதிவு இயந்திரங்கள் என மொத்தமாக 3,902 வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளா் பெயா், சின்னம் பொருத்தும் பணி வியாழக்கிழமை அந்தந்த தொகுதிக்கு உள்பட்ட வட்டாட்சியா் அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது.
இந்த பணி இன்னும் இரண்டு நாள்களுக்கு நடைபெறும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.
தொடர்புடையது

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தொடக்கம்

வாக்குப் பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிகள் இன்று தொடக்கம்

6,576 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சிமுறையில் தோ்வு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


