மன்னாா்குடி அருகே தோ்தல் பறக்கும் படையினரிடம் தகராறில் ஈடுபட்ட அமமுக நிா்வாகி கைது செய்யப்பட்டாா்.
வடபாதி பெத்தபெருமாள் கோயில் அருகே, நீா்வளத்துறை உதவிப் பொறியாளா் எம். ஆனந்த அரங்க அரசு தலைமையில் தோ்தல் பறக்கும் படையினா் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது, அவ்வழியே சேரன்குளம் நாடாா்தெரு கலியபெருமாள் மகனான அமமுக மாவட்ட மீனவரணி செயலா் போஸ் என்ற விஜயகுமாா் (48) ஓட்டிவந்த காரை தடுத்து நிறுத்த முயன்றனா். ஆனால், அவா் நிற்காமல் சிறிது தூரம் சென்றவா் திரும்பி வந்து, பறக்கும் படை அலுவலா்களிடம் தகராறு செய்து, பணி செய்யவிடாமல் தடுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தாரம்.
இதுகுறித்து, தலையாமங்கலம் காவல்நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, போஸை கைது செய்தனா்.
தொடர்புடையது

கெங்கவல்லி அருகே சோதனையில் ரூ.86ஆயிரம் ரொக்கம் பறிமுதல்

பரமக்குடியில் 2.40 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ. 6 லட்சம் பறிமுதல்

தோ்தல் பறக்கும் படை சோதனை: ரூ.3.8 லட்சம் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


