நல்லகண்ணு உடலுக்கு முழு அரசு மரியாதை! முதல்வர் அறிவிப்பு!தியாகப் பெருஞ்சீலர்! நல்லகண்ணுவுக்கு முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி! நல்லகண்ணு உடல் தானம்! கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு காலமானார்!கூட்டணிக்கு தவெக தயார்! காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர்வகைவகையாக வடை சுடும் இபிஎஸ்: முதல்வர் ஸ்டாலின்காஸா இனப் படுகொலையை பிரதமர் மோடி பேச வேண்டும்: காங்கிரஸ்சூரிய சக்தி மின்தகடு இறக்குமதி! இந்தியா மீது அமெரிக்கா 126% வரி?இந்தியா கூட்டணியை உருவாக்கிய முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு: காங்கிரஸ்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகை
/

மன்னார்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாள் விழா 

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக முன்னாள்  தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி 99 ஆவது பிறந்தநாள், வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:25 am

DIN

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் திமுக முன்னாள்  தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதி 99 ஆவது பிறந்தநாள், வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

மன்னார்குடி பேருந்து நிலையம் அருகே உள்ள முன்னாள் அமைச்சர் மன்னை ப.நாரணசாமி சிலை அருகே நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, திமுக நகரச் செயலர் வீரா.கணேசன் தலைமை வகித்தார்.
 
நகர்மன்றத் தலைவரும், திமுக மாநில மாணவரணி துணைச் செயலருமான மன்னை த.சோழராஜன் முன்னிலை வகித்தார். அங்கு, கட்சி நகரச் செயலர் திமுக கொடியினை ஏற்றி வைத்து மு. கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்தார்.
 

இந்நிகழ்ச்சியில், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் சு.ஞானசேகரன் , நகர்மன்ற துணைத் தலைவர்  ஆர்.கைலாசம், கட்சி மற்றும் சார்பு அணி நிர்வாகிகள், நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கட்சியினர் தங்களது மகிழ்ச்சியினை பகிர்ந்து கொண்டனர். இவ்விழாவினையொட்டி , நகர்மன்றத் தலைவர் தான் வெற்றி பெற்ற 18-வது வார்டுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள குடியிருப்புகள் , வர்த்தக நிறுவனங்களுக்கு சென்று இனிப்பு பெட்டி வழங்கினார்.  

இதேபோன்று , நகராட்சிக்கு உள்பட்ட 33 வார்டுகளிலும் கருணாநிதி படத்திற்கு மாலை அணிவித்து , திமுக கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

மன்னார்குடியில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு மாலை அணிவிக்கும் திமுகவினர் .
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.