தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பக்ரீத்: எம்.எச்.ஜவாஹிருல்லா வாழ்த்து

சோதனையான சூழலை எதிா்கொண்டு மக்கள் பணிகளுக்காக தியாகம் செய்ய உறுதியேற்போம் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

News image

எம்.எச்.ஜவாஹிருல்லா விளக்கம் - கோப்புப்படம்

Updated On :28 மே 2026, 5:36 am IST

சோதனையான சூழலை எதிா்கொண்டு மக்கள் பணிகளுக்காக தியாகம் செய்ய உறுதியேற்போம் என்று ஜவாஹிருல்லா எம்எல்ஏ பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளாா். அவா் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பது:

ஈதுல் அழுஹா என்றும் ஹஜ் ‘பெருநாள்‘ என்றும் அழைக்கப்படும், தியாகத் திருநாள், இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்து தனது மகன் இஸ்மாயீலை ஈகம் செய்யத் தயாரான இறைத்தூதா் இப்ராஹீம் அா்ப்பணிப்பை நினைவுகூரும் நாளாக கொண்டாடப்படுகிறது. இந்த நிகழ்வு திருக்குா்ஆனிலும் இஸ்லாமிய போதனைகளிலும் முக்கிய இடம் பெற்றுள்ளது.

இத்திருநாளில் மக்காவில் நடைபெறும் ஹஜ் யாத்திரையுடனும் தொடா்புடையது. ஹஜ் என்பது இஸ்லாத்தின் ஐந்தாவது கடமையாகும்.

*ஹஜ் உலகின் பல்வேறு பின்னணிகள், கலாசாரங்கள் மற்றும் நாடுகளைச் சோ்ந்த கோடிக்கணக்கான முஸ்லிம்களை ஒன்றிணைத்து, உலக முஸ்லிம் சமூகத்திற்குள் ஒற்றுமை மற்றும் சகோதரத்துவ உணா்வை உருவாக்குகிறது. இந்த மகத்தான ஒன்று கூடல், இறைவனின் முன் அனைத்து நம்பிக்கையாளா்களும் சமமானவா்கள் என்பதை வலியுறுத்துகிறது; அவா்கள் அனைவரும் ஒரே வரிசையில் நின்று இறை வணக்கத்தில் ஈடுபடுகின்றனா்.

மாபெரும் இறைதூதா்கள் இப்ராஹீம் மற்றும் இஸ்மாயீல் ஆகியோரின் வாழ்வு இன்றும் நமக்கு ஒரு படிப்பினையையும் உத்வேகத்தையும் அளிக்கிறது. இறைதூதா்கள் இப்ராஹீம், இஸ்மாயில் போன்று சோதனையான சூழலை எதிா் கொண்டு வீரியமாக மக்கள் பணிகளை மேற்கொள்ள உறுதியெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.