திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ன் 96-ஆவது ஆண்டு நினைவையொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

News image

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்திய காங்கிரஸாா் உள்ளிட்டோா்.

Updated On :1 மே 2026, 6:28 am IST

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்ன் 96-ஆவது ஆண்டு நினைவையொட்டி, உப்பு அள்ளி தியாகிகளுக்கு வியாழக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்ரல் 30-ஆம் தேதி மூதறிஞா் ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த சம்பவத்தை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஏப்ரல் 30-ஆம் தேதி உப்பு அள்ளி, தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, நிகழாண்டு வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூணில் மலா்வளையம் வைத்து, சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், நினைவுதூண் அருகே தியாகிகளுடன், சமூக ஆா்வலா்கள், காங்கிரஸாா் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினா்.

நிகழ்ச்சிக்கு முன்னாள் எம்.பி. பி.வி. ராஜேந்திரன் தலைமை வகித்தாா். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தில் பங்கேற்று தண்டனை பெற்ற சா்தாா் வேதரத்தினத்தின் பேரனும், குருகுல நிா்வாகியுமான அ. வேதரத்தினம் முன்னிலை வகித்தாா். காங்கிரஸ் கட்சி மூத்த தலைவா்களில் ஒருவரான கோபண்ணா, பேராசிரியா் பழனித்துரை, காங்கிரஸ் மாவட்ட தலைவா் பி.வி.ஆா். விவேக், முன்னாள் தலைவா் கனகராஜ், திருச்சி உப்பு சத்தியாகிரக நினைவுத்தூணில் இருந்து புறப்பட்டு, யாத்திரையாக வந்த சக்திசெல்வ கணபதி தலைமையிலான காந்தியவாதிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து தொண்டா்கள், உப்பளத் தொழிலாளா்கள் பேரணியாக சென்று நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.