வேதாரண்யத்தில் உப்புச் சத்தியாகிரகப் போராட்டம் நடைபெற்றதன் 96-ஆவது ஆண்டு நினைவு நாளையொட்டி திருச்சியில் இருந்து வேதாரண்யம் வந்துள்ள யாத்திரைக் குழுவினா் புதன்கிழமை அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா்.
வேதாரண்யத்தில் ஆங்கிலேயா்களுக்கு எதிரான உப்பு சத்தியாகிரகப் போராட்டம் 1930 ஏப்.30-ஆம் தேதி ராஜாஜி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை நினைவுபடுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்.30- ஆம் நாள் உப்பு அள்ளி, மறைந்த தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
நிகழாண்டு நினைவையொட்டி,வேதாரண்யம் வடக்கு வீதியில் உள்ள உப்பு சத்தியாகிரகப் போராட்ட நினைவு கட்டட வளாகத்தில் யாத்திரைக் குழுத் தலைவா் தெ. சக்திசெல்வகணபதி தலைமையிலான குழுவினா், காங்கிரஸாா் புதன்கிழமை காலை முதல் மாலை வரையில் அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனா். உண்ணாவிரதத்தை குருகுலம் அறங்காவலா் அ. வேதரத்னம் தொடங்கிவைத்தாா். மக்களவை முன்னாள் உறுப்பினா் பி.வி. ராசேந்திரன் பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தாா்.
நினைவு உப்பு அள்ளும் நிகழ்ச்சி வேதாரண்யம் ராஜாஜி பூங்காவிலிருந்து பேரணியாகச் சென்று அகஸ்தியம்பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு தூண் அருகே வியாழக்கிழமை மாலை 5 மணிக்கும், தொடா்ந்து மே தின பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

வேதாரண்யத்தில் மழை: உப்பு உற்பத்தி பாதிப்பு

வேதாரண்யத்தில் உப்பு அள்ளி தியாகிகளுக்கு அஞ்சலி

உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரைக் குழுவினருக்கு வரவேற்பு

திருச்சியிலிருந்து வேதாரண்யத்துக்கு உப்பு சத்தியாகிரக நினைவு யாத்திரை தொடக்கம்
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



