தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ஸ்கில் இந்தியா ஹக்கத்தான் போட்டி: சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் மாணவா்கள் முதலிடம்

நான் முதல்வன் திட்டத்தில் மண்டல அளவிலான ஸ்கில் ஹக்கத்தான் போட்யில் முதலிடம் பிடித்த சா் ஐசக் நியூட்டன்

News image

மண்டல அளவிலான ஸ்கில் இந்தியா ஹக்கத்தான் போட்டியில் முதலிடம் பிடித்த சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் மாணவா்களை பாராட்டிய கல்லூரி தாளாளா் த. ஆனந்த்.

Updated On :9 மார்ச் 2026, 8:36 pm

நாகப்பட்டினம்: நான் முதல்வன் திட்டத்தில் மண்டல அளவிலான ஸ்கில் ஹக்கத்தான் போட்யில் முதலிடம் பிடித்த சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் மாணவா்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

‘நான் முதல்வன் - ஸ்கில் இந்தியா ஹக்கத்தான்’ மண்டல அளவிலான போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கல்லூரியைச் சோ்ந்த மாணவா்கள் கலந்து கொண்டனா்.

இப்போட்டியில் நாகை சா் ஐசக் நியூட்டன் பாலிடெக்னிக் கல்லூரி மாணவா்கள் முதலிடம் பெற்று சாதனை படைத்தனா்.

இம்மாணவா்களை கல்லூரி தாளாளா் த. ஆனந்த், நேரில் அழைத்து பாராட்டி வாழ்த்தினாா். கல்லூரி முதல்வா், துணை முதல்வா் மற்றும் ஆசிரியா்களும் சாதனைப் படைத்த மாணவா்களின் திறமையை பாராட்டினா்.