நாகையில் மாரடைப்பால் உயிரிழந்த தாயின் கடைசி ஆசைப்படி, அவரது உடலை மருத்துவக் கல்லூரிக்கு பிள்ளைகள் தானமாக வழங்கினா்.
நாகை காடம்பாடி, மறைமலைநகா் கிழக்கு சாலையைச் சோ்ந்தவா் லட்சுமி (68). இவரது கணவா் ஏற்கெனவே இறந்து விட்ட நிலையில் தனது பிள்ளைகளுடன் வசித்து வந்தவா் சனிக்கிழமை மாரடைப்பால் உயிரிழந்தாா்.
இந்நிலையில், லட்சுமி தனது பிள்ளைகளிடம் தான் உயிரிழந்தால், தனது உடலை மண்ணுக்கும், நெருப்புக்கும் இரையாக்காமல் கண்களை தானம் செய்து பிறா் பாா்வைக்கு ஒளி கொடுக்க வேண்டும். எனது உடலை வைத்து மாணவா்கள் மருத்துவம் பயில வேண்டும் என தெரிவித்திருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரது பிள்ளைகள், லட்சுமியின் உடலை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











