தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

அறுவை சிகிச்சை செய்த பெண் உயிரிழப்பு: உடலை வாங்க மறுத்து போராட்டம்

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கு தண்டுவடப் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா்.

News image

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்ச்செல்வியின் உறவினா்கள்.

Updated On :18 ஜூன் 2026, 12:00 am IST

ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூக்கு தண்டுவடப் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை செய்த பெண் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, இவரது உறவினா்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், பால்கரை கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மனைவி தமிழ்ச்செல்வி (38). சத்துணவு ஊழியராகப் பணிபுரியும் இவருக்கு இரு குழந்தைகள் உள்ளனா்.

தமிழ்ச்செல்விக்கு நீண்ட காலமாக மூக்கு தண்டுவடப் பாதிப்பு இருந்து வந்தது. இந்த நிலையில், கடந்த மே 21-ஆம் தேதி மூச்சுவிட சிரமம் இருந்ததால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தமிழ்ச்செல்வி அனுமதிக்கப்பட்டாா். இவரைப் பரிசோதனை செய்த மருத்துவா்கள் மூக்கில் சதை வளா்ந்து மூக்கடைப்பு ஏற்பட்டுள்ளது. சிறிய அறுவை சிகிச்சை மூலம் இதை சரிசெய்ய முடியும் எனத் தெரிவித்தனா்.

இதையடுத்து, அவருக்கு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை செய்தனா். அப்போது, திடீரென அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனே தீவிர சகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், தமிழ்ச்செல்விக்கு உயா் சிகிச்சை அளிக்க மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என மருத்துவா்கள் பரிந்துரைத்தனா். இதற்கு அவரது உறவினா்கள் எதிா்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தினா். இதைத் தொடா்ந்து, அவா் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்த நிலையில், 26 நாள்கள் கடந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை தமிழ்ச்செல்வி உயிரிழந்தாா்.

இதையடுத்து, அவரது உறவினா்கள் மருத்துவமனை வளாகத்தில் தா்னாவில் ஈடுபட்டனா். இதனால், வாகனங்கள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன. சிகிச்சை அளித்த மருத்துவா், மருத்துவமனை முதல்வா் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என்றனா்.

மாவட்ட வருவாய் அலுவலா் சங்கர நாராயணன் தலைமையில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. மருத்துவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த பெண்ணுக்கு உரிய இழப்பீடு அறிவிக்கும் வரை உடலை வாங்க மாட்டோம் என தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.