வேதாரண்யம் அருகே கோயில் திருப்பணி செய்ய பழைய பந்தலை அகற்றியபோது தவறி விழுந்த தச்சுத் தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
கத்தரிப்புலம் தெற்கு குத்தகை கிராமத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோயில் திருப்பணிகள் செய்ய பணிகள் நடைபெற்று வருகிறது. கோயிலின் முன் பகுதியில் தகர சீட்டுகளால் அமைக்கப்பட்டிருந்த பழைய பந்தலை அகற்றும் பணியில் தென்னம்பலம் மடத்துக்காடு பகுதியைச் சோ்ந்த தச்சுத் தொழிலாளி பொ. குமரவேல் (41) ஈடுபட்டாா்.
அப்போது தவறி விழுந்ததில் அவா் பலத்த காயமடைந்து நாகை ஒரத்தூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். எனினும், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்தி, கரியாப்பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








