நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் முடிவது எப்போது ?

நாகூரில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் எப்போது முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 5:56 pm

அ. அன்புமணி

நாகூரில் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் எப்போது முடிந்து பயன்பாட்டுக்கு வரும் என பொதுமக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
24.10.1866-இல் தமிழகத்தில் தொடங்கப்பட்ட 11 நகராட்சிகளில் நாகை நகராட்சியும் ஒன்று.1985-இல் முதல்நிலை நகராட்சியாக மாறி, பின்னர் 1998 முதல் தேர்வுநிலை நகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது. சுமார் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள்தொகையை உடைய நாகை நகராட்சி மக்களின் பயன்பாட்டுக்காக 11.12.2007-இல் ரூ. 79.31 கோடி செலவில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, நாகை  பகுதிகளில் மட்டும் இத்திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.
1 முதல் 10 வார்டுகளைக் கொண்ட நாகூர் பகுதிகளில் இப்பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாகூரில் இத்திட்டப் பணிகள் முழுமையாக நிறைவுப் பெறாததால் புதைச் சாக்கடை இணைப்புக் கோரி நாகை நகராட்சியில் கட்டணம் செலுத்தியுள்ள சுமார் 3000-க்கும் மேற்பட்டோர் எப்போது புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவு பெறும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
புதைச்  சாக்கடைத் திட்டப் பணிகள் நிறைவு பெறாததால், நாகூர் தெருக்களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சாலையில் தேங்கி நிற்கின்றன. மேலும், பல இடங்களில் கழிவு நீர் வெளியேற வழியில்லாமல் குட்டைபோல் தேங்கி நின்று கொசு உற்பத்தி அதிகமாகிறது, இதனால் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தோல் நோய்கள் பரவுகின்றன. கழிவுநீர் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் வெளியேற முடியாமல் தேங்கி குடிநீரில் கலந்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால், அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதுடன், அப்பகுதி மக்களுக்கு நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, புதைச் சாக்கடைத் திட்டப் பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும் என்பதே நாகூர் மக்களின் கோரிக்கையாக இருந்து
வருகிறது.
இதுகுறித்து நாகூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் நெளசாத் கூறியது: 2007-இல் தொடங்கப்பட்ட புதைச் சாக்கடைத் திட்டப் பணிகள் இதுவரை நிறைவு பெறவில்லை. நாகை நகராட்சிக்கு அதிக வருவாயைக் கொடுக்கும் நாகூர் பகுதி பல வகைகளில் புறக்கணிக்கப்பட்டு வருகிறது. நாகூரில் பணிகள் முடிவு பெறாத நிலையில், ஒரு பகுதியில் மட்டும் இத்திட்டத்தைச் செயல்படுத்தும் நாகை நகராட்சியின் இத்தகைய செயல்பாடு ஏற்புடையதல்ல. திட்டம் செயல்படுத்தாத நிலையில் கோடிக்கணக்கான மதிப்பீட்டில் நாகூர் பகுதியில் நீரேற்றும் நிலையங்கள் மற்றும் அந்த நிலையங்களின் அருகில் வைக்கப்பட்டுள்ள பல லட்சம் மதிப்பிலான ஜெனரேட்டர்கள் வீணாகியுள்ளன.
நாகூரில் கழிவுநீர் வடிகால் வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புச் செய்யப்பட்டுள்ளதால் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்களிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் தெரு வீதிகளில் வழிந்தோடுகிறது. இதனால், கழிவு நீரைக் கடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் குழந்தைகளுக்கு நோய்த் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. 
இந்நிலையில், புதைச் சாக்கடைத் திட்டத்தை விரைந்து முடிக்க நாகை மாவட்ட மற்றும் நகராட்சி  நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும்பட்சத்தில் மக்களைத் திரட்டி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம் என்றார். 
இதுகுறித்து, நாகை நகராட்சி ஆணையர் கூறியது: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேற்பார்வையில் நாகூரில்  கழிவுநீர் சுத்திகரிப்பு  நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார். 
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலர் கூறியது: நாகூரில் கட்டப்பட்டு வரும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. 2019 ஜனவரி மாதத்தில் பணிகள் நிறைவு பெறும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.