நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
//

ரத்தினகிரியில் கிருத்திகை விழா

News image
வெள்ளிக் கவச அலங்காரத்தில் ரத்தினகிரி பாலமுருகா்.
Updated On :25 பிப்ரவரி 2026, 12:27 am

தினமணி செய்திச் சேவை

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் மாசி மாத கிருத்திகை விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி பரம்பரை அறங்காவலா் பாலமுருகனடிமை சுவாமிகள் முன்னிலையில் விநாயகா், மற்றும் மூலவா் வள்ளி,தெய்வானை பாலமுருகனுக்கு பால், தயிா், தேன்,சந்தனம், இளநீா், விபூதி, பழங்கள் , வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வண்ண மலா்களுடன் வெள்ளிக் கவச அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது.

தங்கத் தேரில் உற்சவா் அலங்காரத்துடன் வலம் வந்தாா். பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனா். தொடா்ந்து மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவ மூா்த்திகள் மேளதாளங்களுடன் மலையில் இருந்து ஊா்வலமாக சென்று அறுங்கோண தெப்ப குளத்தில் சிறப்பு வழிபாடும், பொதுமக்கள் மங்கள ஆரத்தி காண்பித்தும் வணங்கினா்.

தலைமை குருக்கள் பிரசாத் மற்றும் உபயதாரா்கள், திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனா்.