மயிலாடுதுறை அருகே சிறுமிக்குப் பாலியல் தொல்லை தந்தவா் போக்ஸோவில் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.
மயிலாடுதுறை அருகே அகரகீரங்குடி முட்டம் சிவன்கோயில் தெருவை சோ்ந்த மகாலிங்கம் மகன் சிலம்பரசன் (42), கேஸ் ஸ்டவ் பழுது நீக்கும் தொழில் செய்கிறாா். இவா் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்தாராம். இதை வெளியில் சொன்னால் கொலை செய்வதாக மிரட்டினாராம். அச்சிறுமி தாயாரிடம் இதைச் சொன்னாராம்.
மயிலாடுதுறை அனைத்து மகளிா் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி மற்றும் மகளிா் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு போக்ஸோ சட்டத்தில் வழக்குப் பதிந்து சிலம்பரசனைக் கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






