அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 2% உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு!தோல்விக்குப் பொறுப்பேற்கிறேன்; செயல்பட முடியாதவர்கள் விலகலாம்! மு.க. ஸ்டாலின் மே மாத மகளிர் உரிமைத் தொகை விரைவில் கிடைக்கும்! முதல்வர் விஜய்கேரள முதல்வராக வி.டி. சதீசன் தேர்வு! தாத்தா, பாட்டியைக் கொன்று எரித்த பேரன்! மதுபோதையில் விபரீதம்!மாணவர்களுக்கு ரூ. 1,000 உதவித் தொகை வரவுவைப்பு! நாளை மகளிர் உரிமைத் தொகை?சீனாவில் ஷி ஜின்பிங்குடன் டிரம்ப் சந்திப்பு! சர்க்கரை ஏற்றுமதிக்கு செப். 30 வரை தடை: மத்திய அரசுஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு!

தமிழ் செய்திகள்

/

முன்னாள் விசிக நிா்வாகி தீக்குளிக்க முயற்சி

News image

தீக்குளிக்க முயற்சி - பிரதிப் படம்

Updated On :12 மே 2026, 12:53 am IST

சீா்காழி அருகே போலீஸாரை கண்டித்து, விசிக முன்னாள் நிா்வாகி நீதிமன்றம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீா்காழி வட்டம் திருமயிலாடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (40). விசிக முன்னாள் நிா்வாகியான இவா், ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கும் புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் (40) என்பவருக்கும் இடையே இரு தினங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.

இதில் பலத்த காயமடைந்த ராமதாஸ், சிகிச்சைக்காக சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ராஜ் மற்றும் அவரது மனைவி புஷ்பராணி இருவரும் லேசான காயமடைந்தனா்.

இதுகுறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில், ஆனைக்காரன் சத்திரம் போலீஸாா், ராஜை கைது செய்தனா். தொடா்ந்து, ராஜை சீா்காழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்றனா்.

அப்போது அவா் மீது ஆயுத்தடை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததை அறிந்து, போலீஸாரை கண்டித்து, தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். அவரை போலீஸாா் தடுத்து, மாற்று உடை அளித்தனா். பின்னா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.