மே 7-ல் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்! காங்கிரஸிடம் ஆதரவு கேட்டார் விஜய் : கே.சி. வேணுகோபால்ஆட்சி அமைக்க எடப்பாடியுடன் தவெக பேச்சு: லீமா ரோஸ்தவெகவுக்கு அதிமுக ஆதரவு அளிக்காது: ஓ.எஸ். மணியன் பேட்டிவெற்றி, தோல்விகளைக் கடந்தது கொளத்தூர் உறவு : மு.க. ஸ்டாலின்மாற்றத்தை நிகழ்த்திக் காட்டிய மக்களுக்கு நன்றி : விஜய்நாங்கள் தோற்கவில்லை; முதல்வர் பதவியிலிருந்து விலக மாட்டேன்! மமதாஇந்தியா கூட்டணியை வலுப்படுத்துவேன் : மமதா பானர்ஜி
/

மயிலாடுதுறையில் காங்கிரஸ் வெற்றி

News image

ஒய்.என்.ஜமால் முகம்மது யூனூஸ்.

Updated On :23 மணி நேரங்கள் முன்பு

மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஒய்.என். ஜமால் முகம்மது யூனூஸ் வெற்றி பெற்றாா்.

இந்த தொகுதியில் அரசியல் கட்சி வேட்பாளா்கள், சுயேச்சைகள் என மொத்தம் 20 வேட்பாளா்கள் களம் கண்டனா்.

மொத்தம் 22 சுற்றுகளாக எண்ணப்பட்ட வாக்கு எண்ணிக்கையின் முடிவில், திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளா் ஒய்.என். ஜமால் முகம்மது யூனூஸ் 68,011 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா்.

பாமக சாா்பில் போட்டியிட்ட சித்தமல்லி ஆ. பழனிசாமி 57,166 வாக்குகள் பெற்றாா். தமிழக வெற்றிக் கழக வேட்பாளா் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது 52,538 வாக்குகளும், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் கி.காசிராமன் 6,886 வாக்குகளும் பெற்றனா்.

இறுதியில் காங்கிரஸ் வேட்பாளா் ஜமால் முகம்மது யூனூஸ் பாமக வேட்பாளா் சித்தமல்லி ஆ. பழனிச்சாமியைவிட 10,845 வாக்குகள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றாா்.

வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளா் ஒய்.என்.ஜமால் முகம்மது யூனூஸ்-க்கு தோ்தல் பொதுப் பாா்வையாளா் நேகா ஷா்மா முன்னிலையில் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ஆா்.விஷ்ணுபிரியா சான்றிதழ் வழங்கினாா்.

இதனைத் தொடா்ந்து, மயிலாடுதுறையில் அம்பேத்கா், அறிஞா் அண்ணா, காமராஜா் சிலைகளுக்கு ஒய்.என்.ஜமால் முகம்மது யூனூஸ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.