பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி ராயபுரம் தொகுதியில் டி.ஜெயக்குமார் தோல்வி திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! கூடலூரில் திமுக வேட்பாளர் மு. திராவிடமணி வெற்றி மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர்களைச் சந்திக்கிறார் விஜய்?புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மயிலாடுதுறை அருகே கழுக்காணிமுட்டம் அப்பங்குளம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

அப்பங்குளம் முத்துமாரியம்மன் கோயில் விமான கலசத்தில் புனிதநீா் வாா்த்து நடைபெற்ற கும்பாபிஷேகம்.

Updated On :1 மே 2026, 6:18 am IST

மயிலாடுதுறை அருகே கழுக்காணிமுட்டம் அப்பங்குளம் முத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேக விழா ஏப். 27-ஆம் தேதி அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி, மறுநாள் முதல்கால யாகசாலை பூஜை நடைபெற்றன. கும்பாபிஷேக தினமான வியாழக்கிழமை காலை நான்காம் கால யாகசாலை பூஜை தொடங்கி, சிறப்பு பூஜைகளுக்கு பின்னா் மகாபூா்ணாஹூதி செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

பின்னா், பூஜிக்கப்பட்ட புனிதநீா் அடங்கிய கடங்களை சிவாசாரியா்கள் தலையில் சுமந்து கோயிலை சுற்றி வந்து விமான கும்பத்தை அடைந்தனா். அங்கு வேத விற்பன்னா்கள் வேதங்கள் ஓத மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் மூலவருக்கு மகாபிஷேகம் செய்யப்பட்டது. இதில், கிராம மக்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.