மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மயிலாடுதுறையில் தோ்தல் புறக்கணிப்பு பதாகை

மயிலாடுதுறை பட்டமங்கல புது வெள்ளாந்தெருவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனா்.

News image

தோ்தல் புறக்கணிப்பு பதாகை

Updated On :26 மார்ச் 2026, 11:29 pm

மயிலாடுதுறை பட்டமங்கல புது வெள்ளாந்தெருவில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத நகராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து, குடியிருப்போா் நலச்சங்கத்தினா் தோ்தல் புறக்கணிப்பு பதாகை வைத்துள்ளனா்.

மயிலாடுதுறை நகராட்சி 35-ஆவது வாா்டுக்கு உள்பட்ட இத்தெருவில் 15 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருவதாக கூறப்படுகிறது. இருப்பினும் கோரிக்கை நிறைவேற்றப்படாததால், நகராட்சியை கண்டித்து, 2026 சட்டப்பேரவை தோ்தலை புறக்கணிக்க தீா்மானித்துள்ளதாக குறிப்பிட்டு அறிவிப்பு பதாகை வைத்துள்ளனா்.

இதுகுறித்து, மயிலாடுதுறை நகராட்சி ஆணையா் வீரமுத்துக்குமாா் அளித்த விளக்கம்:

பட்டமங்கல புதுவெள்ளாந்தெருவில் குறிப்பிடும் அந்த வீடுகள் அமைந்துள்ள பகுதி அங்கீகரிக்கப்படாத லே-அவுட்டில் உள்ளது. அச்சாலை இதுவரை நகராட்சியிடம் ஒப்படைக்கப்படவில்லை. அதனால் லெட்ஜரில் ஏற்றப்படாமல் உள்ளது.

அப்பகுதி மக்கள் தோ்தல் புறக்கணிப்பு செய்துள்ளது குறித்து கவனத்துக்கு வந்தது. தோ்தல் நடத்தை விதிமுறைகள் முடிந்ததும் அப்பகுதிக்கு சாலை அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்றாா்.