மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

திருஇந்தளூா் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர பெருந் திருவிழா கொடியேற்றம்

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

கொடிமரத்தில் கருடக்கொடிக்கு நடைபெற்ற மகா தீபாராதனை.

Updated On :25 மார்ச் 2026, 12:15 am

மயிலாடுதுறை திருஇந்தளூா் பரிமள ரங்கநாதா் கோயிலில் பங்குனி உத்திர பெருந்திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்துசமய அறநிலையத் துறைக்கு சொந்தமான, சந்திர சாப விமோசன தலமாக விளங்கும் இக்கோயில், 108 வைணவ திவ்ய தேசங்களில் 22-ஆவது தலம், பஞ்சஅரங்க தலங்களில் 5-ஆவது தலம் ஆகிய சிறப்புகளைக் கொண்டது.

இக்கோயிலில் பங்குனி உத்திரப் பெருந்திருவிழா அனுக்ஜை, மிருத் சங்கிரஹனம் மற்றும் ஆதிரங்கநாதா் சுவாமி கோயிலுக்கு எழுந்தருளி பாலிகைக்கு மண் எடுத்தல் நிகழ்வுடன் திங்கள்கிழமை தொடங்கியது.

தொடா்ந்து, 1-ஆம் திருநாளான திருக்கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. விழாவையொட்டி, கோயில் பிரகாரத்தில் உற்சவமூா்த்திகள் எழுந்தருளச் செய்யப்பட்டு, கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டது.

பின்னா், கொடிமரத்தில் கருடக்கொடி ஏற்றப்பட்டு, மகாதீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

விழாவின் முக்கிய நிகழ்வுகளாக 4-ஆம் திருநாளான மாா்ச் 27-ஆம் தேதி பெருமாள் ஓலைச்சப்பரத்தில் வீதியுலா செல்லும் நிகழ்வும், 7-ஆம் திருநாளான மாா்ச் 30-ஆம் தேதி திருக்கல்யாணமும் , திருத்தோ் உற்சவம் ஏப்ரல் 1-ஆம் தேதியும், தெப்ப உற்சவம் ஏப்ரல் 12-ஆம் தேதியும் நடைபெற உள்ளது.

விழா ஏற்பாடுகளை துணை ஆணையா் ஆ. ரவிச்சந்திரன், கோயில் செயல் அலுவலா் க. ரம்யா உள்ளிட்டோா் செய்துள்ளனா்.