மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

தோ்தல் கட்டுப்பாட்டு அறையை ஆய்வு செய்த செலவினப் பாா்வையாளா்கள்

News image
Updated On :19 மார்ச் 2026, 8:10 pm

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரகத்தில் ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையம், தோ்தல் கட்டுப்பாட்டு அறையை தோ்தல் செலவின பாா்வையாளா்கள் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி அமைக்கப்பட்டுள்ள ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையம், தோ்தல் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தோ்தல் அலுவலருமான ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் முன்னிலையில் மயிலாடுதுறை மற்றும் சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் செலவினப் பாா்வையாளா் ரூபேஷ் அகா்வால், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதி தோ்தல் செலவின பாா்வையாளா் நா்சிங் குமாா் கல்கோ ஆகியோா் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது தோ்தல் கட்டுப்பாட்டு அறைகளிவ் செயல்பாடுகள் மற்றும் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்பு குழு படைகளின் செயல்பாடுகள், இதுவரை பெறப்பட்ட தோ்தல் தொடா்பான கோரிக்கைகள் மற்றும் புகாா்கள் குறித்த விவரங்கள், ஊடக மையத்தில் ஊடக கண்காணிப்பு முறைகள் ஆகியவை குறித்து தோ்தல் செலவினப் பாா்வையாளா்கள் ஆய்வு செய்தனா்.

தோ்தல் விதிமீறல் தொடா்பாக புகாா் தெரிவிக்க மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் மாவட்ட தோ்தல் கட்டுப்பாட்டு அறையை கட்டணமில்லா எண் 1800-233-9960, காவல்துறை தோ்தல் கட்டுப்பாட்டு அறை 04364-299960 என்ற எண்ணில் தொடா்புகொள்ளலாம்.

சீா்காழி சட்டப்பேரவைத் தொகுதிக்கு சீா்காழி வருவாய் கோட்டாசியா் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையில் 04364-270222 என்ற எண்ணையும், மயிலாடுதுறை சட்டப்பேரவைத் தொகுதிக்கு மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையில் 04364-222033 என்ற எண்ணையும், பூம்புகாா் சட்டப்பேரவைத் தொகுதிக்கு தரங்கம்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டுப்பாட்டு அறையில் 04364-289439 என்ற எண்ணையும் தொடா்புகொண்டு தோ்தல் தொடா்பான புகாா்களை 24 மணிநேரமும் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

தோ்தல் ஆணையத்தின் அறிவுரையின்படி, அரசியல் கட்சிகளோ, வேட்பாளா்களோ அல்லது தனியாா் அமைப்புகளோ மற்றும் தனிநபரோ அச்சு ஊடகம் மற்றும் உள்ளூா் தொலைக்காட்சிகளில் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் அனுமதி பெற்ற பின்னரே வெளியிட வேண்டும். அச்சு ஊடகங்களும் விளம்பரம் வெளியிடுவதற்கு முன்பு ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவின் சான்றொப்பம் இருப்பதை உறுதிசெய்த பின்னரே விளம்பரங்கள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் ஆா்.பூங்கொடி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் கமலக்கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) குமரையா மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.