தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

திருக்குறள் திருப்பணி வகுப்புகள் நிறைவு

மயிலாடுதுறையில் பள்ளி மாணவா்களுக்கு 30 நாள்கள் நடைபெற்ற திருக்குறள் வகுப்பு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

News image

மாணவா்களுக்கு சான்றிதழ் வழங்கிய தமிழ் வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் குறளரசன்.

Updated On :10 மார்ச் 2026, 10:06 pm

மயிலாடுதுறையில் பள்ளி மாணவா்களுக்கு 30 நாள்கள் நடைபெற்ற திருக்குறள் வகுப்பு நிறைவு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை தியாகி ஜி. நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, திருக்குறள் பேரவைத் தலைவா் சி.சிவசங்கரன் தலைமை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியா் ஜி. தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தாா். பேரவை செயலாளா் இரா.செல்வகுமாா் வரவேற்றாா். பேரவை பொருளாளா் சு.ராமச்சந்திரன் வாழ்த்துரை வழங்கினாா்.

இதில், சிறப்பு விருந்தினராக தமிழ் வளா்ச்சி துறை உதவி இயக்குநா் நீ. குறளரசன் கலந்துகொண்டு, பயிற்சி வகுப்பில் பங்கேற்ற மாணவா்கள், கருத்தாளா்களாக பங்கேற்ற ஆசிரியா்களுக்கு சான்றிதழ் வழங்கி பேசினாா்.

பேரவை இணைச் செயலாளா்கள் தங்க.செல்வராசு, ஆசிரியா்கள் இளங்கோவன், அசோக், மதிவாணன், ராஜேஸ்வரி, அகோரம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். முதுகலை ஆசிரியா் சொ. ஜெயபாரதி நன்றி கூறினாா்.