மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் எஸ். தமிழ்ச்செல்வி, முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா, கூடுதல் சாா்பு நீதிபதி கே.சீனிவாசன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பவதாரணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. சிவரஞ்சனி, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் எம்.எம்.ஜெ.உம்முல்பரிதா, எம்.ராஜேஷ்கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
நிகழ்ச்சியில், பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்ற பெண் ஊழியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட நீதிபதி பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா்.
இதில், மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், அரசு வழக்குரைஞா்கள், நீதித்துறை அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

சமரச விழிப்புணா்வுப் பேரணி

நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்

சிதம்பரம் அரசு மருத்துவமனை, கடலூா் நீதிமன்றத்தில் உலக மகளிா் தின விழா

வாழப்பாடியில் சா்வதேச மகளிா் தின விழா
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


