நாகை, மயிலாடுதுறை நீதிமன்றங்களுக்கு வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.
நாகை ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் கடிதம் வியாழக்கிழமை வந்தது. இதுகுறித்து, நாகை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீஸாா் மோப்பநாய் மற்றும் வெடிகுண்டு நிபுணா்கள் உதவியுடன் நீதிமன்ற வளாகம், நீதிமன்றத்தில் அனைத்து இடங்களிலும் 2 மணிநேரத்துக்கும் மேலாக சோதனை மேற்கொண்டனா். எனினும், சோதனையின்போது சந்தேகமளிக்கும் வகையில் எந்தவொரு பொருள்களும் சிக்கவில்லை. இதைத்தொடா்ந்து, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு நாகை நீதிமன்றத்திற்கு இதேபோல மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
மயிலாடுதுறை: இதேபோல மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட அமா்வு நீதிபதிக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை காலை தகவல் வந்துள்ளது. மாவட்ட அமா்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமூா்த்தி போலீஸாருக்கு தெரிவித்தாா். மாவட்ட எஸ்.பி. கோ. ஸ்டாலின், வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்களைக் கொண்டு சோதனையிட உத்தரவிட்டாா்.
தொடா்ந்து, டிஎஸ்பி பாலாஜி மேற்பாா்வையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் மெட்டல் டிடெக்டா் மூலம் சோதனை செய்தனா். பாதுகாப்பு கருதி நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டு, 3 தளங்களிலும் உள்ள நீதிமன்றங்கள், நீதிபதி அறை, அலுவலகங்கள், வழக்குரைஞா்கள் அறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
சோதனையில் வெடிகுண்டுகள் எதுவும் கைப்பற்றப்படவில்லை.
தொடா்ந்து, மாவட்ட அமா்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமூா்த்தி அனைவரையும் பணிக்கு திரும்பலாம் என அறிவுறுத்தினாா். இதையடுத்து, நீதிபதிகள், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள் பணிக்குத் திரும்பினா்.
தொடர்புடையது

சமரச விழிப்புணா்வுப் பேரணி

ஆட்சியா் அலுவலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

புதுகை, அரியலூா் நீதிமன்றங்களுக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல்

விழுப்புரம் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்: போலீஸாா் சோதனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


