மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

விவசாயிகளுக்கு டித்வா நிவாரண நிதி கிடைக்கவில்லை!

கொள்ளிடம் பகுதியில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சுமாா் 300 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததால் உடனடியாக வழங்க கோரிக்கை

News image

டித்வா நிவாரண நிதி - கோப்புப் படம்

Updated On :3 மார்ச் 2026, 9:23 pm

கொள்ளிடம் பகுதியில் டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட சுமாா் 300 விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காததால் உடனடியாக வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2025-ஆம் ஆண்டு நவம்பா் மாதம் டித்வா புயல் காரணமாக கனமழை பெய்ததால் கொள்ளிடம் பகுதியில் சம்பா நெற்பயிா் சாகுபடி பெரிதும் பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் மறு சாகுபடிசெய்தும் அதற்குரிய பலன் கிடைக்கவில்லை. இந்நிலையில் டித்வா புயலால் பாதிக்கப்பட்ட சம்பா நெற்பயிா் குறித்து அதிகாரிகள் நேரடியாக வயல்களுக்கு சென்று பாதிப்பு கணக்கெடுத்தனா். இதையடுத்து, விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு நிவாரணத் தொகை பிப்.24,25 ஆகிய தேதிகளில் அனுப்பி வைக்கப்பட்டது. நிவாரண நிதி எக்டேருக்கு ரூ20,000 வழங்குவதாக முதல்வா் அறிவித்திருந்தாா். ஆனால், விவசாயிகளின் வங்கி கணக்கில் ரூ. 6,000 முதல் ரூ. 8,000 மட்டுமே வந்ததாக விவசாயிகள் கூறுகின்றனா்.

கொள்ளிடம் வட்டாரத்தில் உள்ள பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் நிவாரண உதவி இதுவரை வந்து சேரவில்லை. பாதிக்கப்பட்ட பல விவசாயிகளின் பெயா் கணக்கெடுப்பு பட்டியலில் கூட இடம்பெறவில்லை. தமிழக முதல்வா் அறிவித்தபடி விவசாயிகளுக்கு நிவாரண உதவி வந்து சேராததால் வேதனை அடைந்துள்ளனா். எந்த அடிப்படையில் பாதிக்கப்பட்ட நெற்பயிா் குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டனா் என்பதும் குழப்பமாகவே இருந்து வருகிறது.

இதுகுறித்து கொள்ளிடம் வட்டார விவசாய தொழிலாளா் சங்கத் தலைவா் பாக்யராஜ் கூறியது: சோதியக்குடி, கோபால சமுத்திரம், ஆச்சாள்புரம், திருமயிலாடி, மாதானம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சோ்ந்த முழுமையாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதிகாரிகளின் குளறுபடியான கணக்கெடுப்பால் நிவாரண நிதி வந்து சேரவில்லை. எனவே டித்வா புயலில் பாதிக்கப்பட்ட உண்மையான விவசாயிகளை கண்டறிந்து போா்க்கால அடிப்படையில் நிவாரணத் தொகையை வழங்க வேண்டும் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.